(Reading time: 1 - 2 minutes)

யுத்தபூமியின் குழந்தை..! - டோனா

Battle field

வெடிச்சத்தம் கேட்டு
பயந்து அழும் குழந்தைகள்
வாழும் உலகமாம் இது..!!

நானும் குழந்தைதான்..
ஆனால்.....
அணுகுண்டு வெடிக்கையில்
கூட கலங்கப்போவதில்லை..!!

கருவறையில் இருக்கையில்
குண்டுச்சத்தமே நான் 
கேட்ட இசை..!!

உலகைக் கண்டபின்
குண்டுச்சத்தமே என்னைத்
தூங்கவைக்கும் தாலாட்டு..!!

தினம் தினம் காலையில்
குண்டுச்சத்தமே என்னை
எழுப்பும் ஓசை..!!

ஆம் நானும் குழந்தைதான்..!!

பிறக்கும் முன் தந்தையை
இழந்தேன் தினம் 
நான் கேட்கும் இசைக்கு..!!

பால் மறக்கும் முன் தாயை
இழந்தேன் தினம் 
நான் கேட்கும் இசைக்கு..!!

வாழ்வில் சிரித்ததும்
என் நினைவில் இல்லை..!!

துள்ளித் திரிந்ததும்
என் நினைவில் இல்லை..!!

உயிர் காக்க ஆங்காங்கு
ஒளிந்தது மட்டுமே என் நினைவில்..!

எதற்கு பிறந்தேன்
என்று அறியேன்..!!
வேறு எதற்கும் ஆசைப்பட்டதில்லை..!
வாழும் ஆசை எனக்கில்லை..
சாகும் ஆசையும் வரவில்லை..
இதற்குமட்டும் ஆசைப்படுகிறேன்..!!!

என் உயிர் பிரிகையில்
அதைக் கேட்டு 
யாரேனும் ஒரு துளிக்
கண்ணீர் விட்டால் போதும்..!!

வாழ்நாளில் ஒருமுறை
மகிழ்ந்து விடுவேன்...
பிறப்பிற்கு அர்த்தம்
கிட்டியதென்று..!!

இப்படிக்கு,,
யுத்தபூமியின் குழந்தை..!!

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.