(Reading time: 1 - 2 minutes)

கவிதை - விடியலைத் தேடி.... - டோனா

Dawn

என்றும் ஏமாற்றம்..
எதிலும் ஏமாற்றம்..

நினைப்பது எதுவும் 
நடப்பதும் இல்லை..
கேட்பது எதுவும்
கிடைப்பதும் இல்லை..
எதிர்ப்பார்ப்பது எதுவும் கிட்டுவதும் இல்லை..

எல்லாரது மனதையும் அனுசரித்து நடந்த 
என் மனதையோ பொருட்படுத்த
எவருமில்லை..
எனக்கென்று மனம் இருப்பதை
உணரவும் எவருமில்லை..

எதற்கும் எதிர்த்துப் பேசமாட்டேன்
என்றறிந்து என்னை 
சாவிக்கொடுத்த பொம்மையாய் 
மாற்றிவிட்டனர்...

தமக்கையவள் பிடித்த வாழ்க்கையை
வாழ செல்ல,,
அவள் செய்த பாவம்
விடிந்ததென்னவோ என் தலையில்..

குழந்தைதனம் மாறாத நான்
இன்று மணமேடையில்,,
தலைக்குனிந்து என் கனாக்களுக்கு
சமாதி கட்டியபடி..

போவது சொர்க்கமா நரகமா
நான் அறியேன்..
அங்கேனும் என் மனதைப்
புரிந்துக்கொள்வான் 
என் மன்னவன் என,,
சமாதியில் உறங்கும் என் கனாக்கள்
உயிர்த்தெழுப்பப்படும் என,,
தவறாமல் இன்றும் எதிர்பார்க்கிறேன்,,
ஏமாற்றம் இருக்காது எனும் 
நம்பிக்கையுடன்..

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.