(Reading time: 1 - 2 minutes)

கவிதை - ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பது ....??? - கண்ணம்மா

அன்பு !!

பல நேரங்களில் விலாசத்தைத்  தொலைத்த கடிதம் ஆகிறது !!

நம்பிக்கை !!
காற்று நிரப்பப்பட்ட வண்ண வண்ண  பலூனாகிறது!!

தாம்பத்தியம்!!
மனச்சேர்க்கை அல்லாமல் , உடல்கள் உரசும் தினசரி கடமையாகிறது !!

வசதி !!
அடுத்தவனின் வாயடைக்க போடப்படும் வேசம் !!

கல்வி !!
பெற்றவர்கள் பிள்ளைகள் மீது செய்யப்படும் முதலீடு !!

விமர்சனம் !!
இப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட நபரின் செல்வாக்கை பொருத்தே அமைகிறது !!

பயம் !!
நம் இயலாமையைக் காட்டும் கண்ணாடி !!

பொறுப்புணர்ச்சி !!
பொறுப்பில்லாத யாரோ ஒருவர் கற்றுக் கொடுத்த பாடம் !!

கள்ளத்தனம் !!
கள்ளமில்லாமல் தோற்றுப் போன ஒருவனின் (கண்ணீர்) பாதிப்பு !!

சொத்து !!
நம் அடக்கி வைத்த இளமையையும், ஆசையையும் காட்டும் அளவுகோல் !!

காதல் !!
விரும்பிய இடத்தில் கிடைக்காமல் , கிடைத்த இடத்தில் பெறவும் முடியாமல் தவிக்கும் தவிப்பு

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.