கவிதை - உன்னுடனான என் வாழ்க்கை - அனிதா சங்கர்
உன்னுடனான என் வாழ்க்கை ஆனது
முகிலுடன் கூடிய நிலவாய் இருந்து
சில நேரங்களில் வென்முகிலாய்
வந்து இன்பத்தையும்
சில நேரங்களில் கருமுகிலாய்
வந்து துன்பத்தையும் தருவதாய்
இருக்கிறது
என்னுடனான உன் வாழ்க்கையானது
நிலவுடன் கூடிய முகிலாய் இல்லாமல்
என் நேரமும் நிலவிற்கு ஒளிக்
கொடுக்கும் சூரியனாய் என் வாழ்வில்
நீ வேண்டும்
சூரியனாய் இருந்து நீ என்னை
நோக்கி எவ்வளவு சுடும்ஒளியை
தந்தாலும் அவையாவும் என்னை
குளிர்விக்கும் ஒளியாய் மாறி
என்னை பிரகாசிக்க செய்யும்
உன்னுடன் ஆன என் வாழ்க்கை
சூரியனை நோக்கிய சந்திரனாய்......
{kunena_discuss:779}