கவிதை - மனிதம் எங்கே? - அனு செல்வி

'வாழ்க்கை'
யாராலும் விடை தர முடியாத விசித்திரமான 'கேள்வி'
'மரணம்'
யாரும் கேள்வி கேட்க முடியாத 'விடை'
ஓடுவது மரணத்திற்குத் தான் என புரியும் போது
கொஞ்சம் மெதுவாகவும் ஓடலாம் என எண்ணத் தோன்றுகிறது .....
'நான் மீண்டும் வரமாட்டேன்' இந்த ஓட்டத்தினூடேயே என்னையும் ரசித்துக்கொள் என்கிறது 'வாழ்க்கை'
"முடிவு மரணம் தானே !...
எதைக் கொண்டு போவோம்?...
அன்பை விதைத்துவிட்டுச் செல்வோம் ....
யாராகினும் அறுவடை செய்யட்டும்.....
முடிந்தமட்டும் ரசித்துக் கொண்டே போவோம்....
மனிதனாய் வாழ மனிதத்துவம் தேடுவோம்..."
என இரு நிமிடம் யோசித்து நிமிருகையிலேயே வாழ்வின் வேகம் ஒளியை விஞ்சுகிறது....
மேற்கூறிய அனைத்தையும் வாழ்வின் வேகத்தில் செய்பவன் நிச்சயம் திறமைசாலி தான்....
வாழ்வின் தேவையைக்
குறைத்து கொண்டு
சமாளிப்பவன் புத்திசாலி....
இந்த புத்திசாலிக்கும் திறமைசாலிக்கும் இடையில்
மனிதம் எங்கே? என்றோ
ஏன் இந்த ஓட்டம்? என்றோ
வினவுபவர்களை காலச்சக்கரம் இந்த ஓட்டப்போட்டியிலிருந்து நீக்கியே விடுகிறது!....
வாழ்வில் பணம் வரும் போகும்...
நேரமோ முடிந்து போகும்...
உழைப்பதற்காக வாழாதீர்!..
வாழ்வதற்காக உழையுங்கள்!...
என்று சொல்லி,
என்ன தான் என்னை நானே
சமாதானப் படுத்திக் கொண்டாலும்
சில ஏமாற்றங்கள் வலிக்கத்தான் செய்கிறது!!...
கேட்பவை எல்லாம் கிடைத்துவிட்டால்
வாழ்க்கையில் ரசனை இருக்காது!....
கிடைப்பவை எல்லாம் நிலைத்துவிட்டால்
கேட்பதற்கு எதுவும் இருக்காது!.....
கண்ணதாசனின் பொன்மொழிகள்...
இதுபோல எத்துனை எத்துனையோ ஊமைச் சமாதானங்கள் என்னுள்ளே!...
'நாம் எந்த அளவுக்கு உயர்தவனாக
வேண்டுமென நினைக்கிறோமோ,
அந்த அளவுக்கு கடுமையான
சோதனைகளிக் கடந்து செல்லவேண்டும்'
என்று இப்பவும் கூட மூளை சமாதானம் செய்தாலும் மனதின் பலவீனம் முகத்தில் அறைகிறது!...
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
Insightful thoughts akka..Loved it