(Reading time: 1 - 2 minutes)

கவிதை - ஆருயிர் தோழியே..! - சமீரா

Love

அறியா வயதில் எனக்கு கிடைத்த வரம்

பள்ளி பருவத்திலும் இணைந்த உன் கரம்

நமக்கிடையில் இல்லை இடைவெளி

குறும்புக்கு நாம்  தான் அடைமொழி

ஊரில் எம்மை விசாரிக்கும்  புதுமுகம்

நம் பெயர் இணைந்தே நமக்கான அறிமுகம்

நமக்குள் சண்டைகள் வராமலில்லை

அவை ஒரு நாள் தாண்டியதுமில்லை

நமக்குள்  வரும் கருத்து  வேறுபாடு

என்றும் இல்லை அதில் முரண்பாடு

கோபத்தில் மௌனம் குடிகொள்ளும்  நேரம்

 நட்பின் ஆழத்தை புரிய வைத்திடும் கண்னின் ஈரம் !

பிரிவினை நமக்குள் வந்ததில்லை

நாம் விட்டுக்கொடுக்க  மறந்ததுமில்லை

முகம் பார்த்து என் மனம் அறிவாய் நீ

அதற்கான ஆறுதல்  தருவதும்  நீ

நான் விட்டபிழைக்கும் விட்டு கொடுக்காதவள்

தவறு செய்தால் உரிமையாய் தட்டி கேட்பவள்

கல்லூரி பருவத்தை கடந்து விட்டோம்

இரண்டு தசாப்தம்  இணைந்தே கழித்தும் விட்டோம்

ஓயாமல் நாம் கதை பேச வேண்டும்

இன்னும் உன் கரம் பற்றி நெடு தூரம்

செல்ல வேண்டும்..!

உன் நட்பு ஆயுள் வரை தொடர வேண்டும்!

என்றும் என் ஆருயிர் தோழியாய் நீ வேண்டும்!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.