(Reading time: 2 - 3 minutes)
humanity

கவிதை - மானுடமே - ரம்யா

உலகம் ஒரு பாழும் குழி நோக்கி பாயுது அந்தோ!

விலங்கு என்று விலக்கி காட்டில் விட்டு நாடு வந்தால்

எது விலங்கு எது மனிதம் விளங்கவில்லை இன்றுவரை

ஆறாம் அறிவை அறுத்தெறிந்து வெறியாட்டம்  இது  மனிதமா

மிக்க மேதாவி என்றெண்ணி நித்தம் ஒரு கூப்பாடு இது என்ன விந்தை

காதல் செத்து காமம் பொசுங்கி இன்று வன்கொடுமை மட்டும் மானுடத்தில்மிச்சம்

ஆண் பெண் தாண்டி வலிமை காட்டும் அற்ப மனோபாவம்

புனிதமான உறவுகள் கூட நெருஞ்சியாய் நெருடும் காலம்

கலங்கமில்லா குழந்தை பருவம் கூட கலங்கடிக்க செய்யும் தருணம்

எப்படி கொடுப்போம் அடுத்த உயிருக்கு ஒரு சிறப்பான எதிர்காலம்

மனம் தான் அழுக்கின் ஊற்று என்றால் புத்தியை மழுக்க கூர்வேள்கள் ஆயிரம்

வளர்ச்சியின் உச்சங்கள் இன்று தந்தது உடலில் பலபல சீர்கேடு

உடலும் மனமும் புத்தியும் கசங்கிய பின் முழுதாய் தான் வாழ்வது எப்படி?

 

விழித்திடு மானுடமே விழித்திடு

ப்ரபஞ்சம் என்பது நம்மின் பெருதுளி

அத்தனை உயிருரிலும் பாய்வது ஒரு துளி

விரிந்த பார்வை எங்கும் பரவட்டும்

ஆறாம் அறிவு ஏழும் தாண்டட்டும்

விலங்குகள் மட்டும் விலங்காய் இருக்கட்டும்

மனிதம் என்றும் புனிதம் காணட்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.