(Reading time: 2 - 3 minutes)
humanity

கவிதை - அவஸ்தை - ரம்யா

காற்றில் தவழ்ந்து வந்து உன் தாவணி எனை உரச

இப்போது என் மனதில்ஓர் இன்பப் புயல் தான்

உன் உடை தோட்ட காற்றும் உன் இடை தொட்ட தாவணியும்

என்னுள் தருகிறது பல வேதியியல் மாற்றம்

என் விழிப்பை திருடி உறக்கம் கலைக்க

இடியும் மின்னலுமாய் பல காதல் கனவுகள்

முத்தத்தில் தொடங்கி மோகம் வரை நீண்டு

எனையும் வெட்கப்பட வைக்கும் அழகான அவஸ்த்தைகள்

 

கனவில் உன் இதழ் சுவைத்த என் இதழ்கள்

ஒற்றை வார்த்தை வெளிவரவும் தடை இங்கே விதிக்கிறது

 உன்னோடு கட்டியணைத்திருந்த கட்டிலும்

விடிந்ததும் என்னை குறும்பாய் தான் பார்க்கிறது

உன் இதழ் தடமும் நகத்தடமும் தேடியே

என் காலை பொழுதுகள் விடிகிறது

தண்ணீரில் என்னோடு என் மோகமும்  நான் கரைக்க

உன் வாசம் மட்டும் இன்னமும் என்னை உயிர்த்து விடுகிறது

உன்னைக் கண்கள்  பார்க்க வரும் போதெல்லாம்

கனவுகள்  என்னை வெட்கிக்கச் செய்கிறது

மனம் மட்டும் உன் காலடியில்

மீண்டுமொரு அவஸ்த்தைக்கு விதை கேட்டு நிற்கிறது

 

காதலா காமமா புரியவில்லை எனக்கு ஆனால்

என் உயிர் நிறப்பும் முழுமை நீ….அது புரிந்ததெனக்கு

என்னவளே!வா!  வந்து என்னுள் கலந்து  விடு

என்னை உன்னுள் முற்றுமாய் கரைத்து விடு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.