(Reading time: 1 - 2 minutes)
humanity

கவிதை - ரோடு சைடு ரோமியோ - ரம்யா

வீதியில கலர்கலரா வானவில்லை பார்த்திருந்தேன்

நீ வந்து நின்ன நோடி அது காற்றில் கரைஞ்சு போனதடி

 

அடிதாரம் பூசிவந்த அழகான முகங்கள் எல்லாம்

உன் இயற்கையான புருவமதில் புதைந்தே போனதடி

 

மினியும் மிடியும் ஜீன்ஸும் ஸ்கர்ட்டும்

சுடிதார் சிற்பம் நீ வர வெறுங்கூடாய் தோணுதடி

 

அப்பன் காசும் சுப்பன் பைக்கும் என் சொத்தா நான் நினைக்க

உன் நெற்றியில் குட்டிபொட்டு ஏளனமா சிரிக்குதடி

 

உன் கழுத்த அணைச்சிருக்கும் ஒத்தவரி சங்கிலியும்

லோலாக்கும் மூக்கு பூவும் எனை ஏதேதோ செய்யுதடி

 

பூவுக்குள் பூவாக உன் நகத்தழகு மின்னுதடி

நீ பிடிங்சிருக்கும் கர்சீப்பா நானும் மாற ஆசையடி

 

உன்  பின்னல் ஜடை ஏறி நிக்கும்அந்த ஒத்த மல்லி சரம் போதுமடி

என் ஆணவம் இழுத்து  உன் காலடியில் கிடத்துதடி

 

ரோடு சைடு ரோமியோவா நானும் தான் நின்னிருந்தேன்

புது ரோடு போட்டு என் நெஞ்சு உன் பக்கம் பாயுதடி

 

மனசு திரும்பாம உன்ன நானும் பார்த்து நிக்க

ஒத்தப்பார்வையில என்ன  மொத்தமா தான் அள்ளிப்போனதேனடி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.