(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதல் தூது - சந்யோகிதா

butterfly

சாளர இருக்கையின் பேருந்து பயணத்தில்

பின்னோக்கி பயணமிடும் மரங்களே..!

துகிலெழும் பொழுதினில் கதிரவன்பால்

கோபம் கொண்டு கலையும் பனித்துளிகளே..!

பகற்பொழுதினில் பூமி காண நாணம் கண்டு

மேகத்துனுள் மறையும் வெண்மதியே..!

காரிருளில் எவரோ சிதறி தொலைத்த

கணக்கிலடங்கா வைர நட்சத்திரங்களே..!

மகரந்தம் பரப்பி பூமியில் பூஞ்சோலை

மணம் மலரச்செய்யும் இளந்தென்றலே..!

தூது செல்வீர்களோ..?

என்னை களவு கொள்ள

காத்திருப்பவனிடம்…..என் காதலை சுமந்து

முக(ம்)வரி இன்றி தவிக்கிறேன் தனிமையில்….!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.