(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நதிமடந்தைப் பெண் - சந்யோகிதா

river

வினாடி ஓய்வின்றி

விரைபயணம் செல்லும் நதியே!

கால கடவுளிடம்

கருணை கேட்டு கணவினாடி நில்….

என் வினாவிற்கு பதிலுரைத்துச் செல்...!

யாரைத்தேடி விரைகிறாயோ?

மனங்கொண்ட பாற்கடல்

மன்னவனைத் தேடியோ?

மெய்காக்கும் தொடர்மலை

காவலனின் கண்ணில் படவோ?

உயிர்க்காரண உயர்மரங்களின்

உறவினைக் கொண்டாடவோ?

ஓடி விளையாட மார்க்கம் தந்த

மண்துகள்களை மகிழ்விக்கவோ?

தென்றல் தூதுவனால் திசையெங்கும்

மணம் பரப்பும் மலர்களைக் காணவோ?

மெளனம் காக்கும் மங்கையே..!

ஒருவேளை உண்மையில்……??

மாந்தர்கள் செய்த மகத்துவம் கண்டு

வெள்ளமெனும் தாண்டவ நடனமிடவோ?

எதற்காக நிற்காமல் ஓடுகிறாயோ?

நதிமடந்தைப் பெண்ணே???

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.