(Reading time: 1 - 2 minutes)

கவிதை - எங்கோ ஒரு அழுகுரல் - தானு

sadBaby

நிஷப்தமான இருளில்
நிறைந்த நிலவொளியில்
கரைந்த கண்ணீருடன்
கலையாத முக அழகுடன்
அங்கோர் மழலை

வீச்சறுவாள் வீசும்
வீராப்பான உலகிலே
வாசமலர் மழலை அது
வாடிக்கிடந்த கோலம் தான்
வானவரையும் வாட்டியதே

பயங்கரமான உலகிலே a
பரிதவிக்கும் மழலையின் 
விழிநீர் விலைமதிப்புதான் என்னவோ
பெற்றவளே கைவிட்டுச் சென்றபின்
மற்றவர்கள் மட்டும் என்ன  செய்யப்போகிறர்கள்?

உலக மேடையில் மனிதாபினம்
மடிந்து வீழ்ந்ததென்று 
அழுகின்றாயா அல்லது
வீசப்பட்டது என்னை மட்டுமல்ல
தாய்மையின் புனிதத்தையும் தான் என்று
விழிநீரில் மடல் எழுதுகின்றாயா?
எதற்காக இந்த அழுகுரல் ??

அழ வேண்டியது நீயல்ல.
தாய்மையின் புனிதம் உணராத
உதிரம் கொடுத்த உன் அன்னையும்
உத்தரவாதமில்லாத உலகமும்தான்.

One comment

  • 🕎🕎காவியப் பெண்ணடி நீ 🕎🕎

     

    காலத்தின் மாற்றதை

    அறிவித்த மங்கையே//

    நூலகம் காணாத

    நுட்பத்தின் எல்லையே//

     

    கனவையும் திருடும்

    கடல்கன்னி நீங்கள்//

    கற்பனைப் பின்னும்

    கவிமடல் பெண்கள்//

     

    உணர்வுகள் அள்ளும்

    தென்றலின் சாரல்//

    உள்ளதைக் கிள்ளும்

    பனிமழைத் தூரள்//

     

    தாயாகிடத் தவழ்ந்தோம்

    சேயாகி மலர்ந்தோம்// 

    தாரமாகிட தணிந்தோம்

    மகளாகிட மகிழ்ந்தோம்//

     

    பள்ளியில் பயின்றோம்

    பாதையில் பழித்தோம்//

    மருந்தாய் வந்தவள்

    விருந்தாய் புசித்தோம்//

     

    உனக்கானக் கனவுடன்

    பொம்மையாய் வாழ்ந்தவள்//

    ஆயிரம் பாத்திரம்

    அடங்கியக் காவியம்//

     

    கவிதரு நஅதி

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.