கவிதை - எனக்காக பிறந்துவிட்ட என் உயிருக்கு - தானு
எனக்காக பிறந்தாயடா நீ
எனக்காக மட்டுமே பிறந்தாய்
உன் பிறந்தநாள் உனக்கு மட்டுமல்ல
எனக்கும் தான் அது இனிய நாள்..
என் மன இடுக்குகளை திற
உனக்கான பரிசு காத்திருக்குறது
அது என்னுயிர்தான்.
உன்னை சேர்ந்து உன்
ஒவ்வொரு நாட்களையும்
புதிதாய் பிறந்த நாளை போல்
கொண்டாட வேண்டும் எனவும்
என்றும் உன் உயிரிலே கலந்திருப்பேன்
நான் வாழ்த்தும் வண்ணப்பாவையாய்.
வாழ்த்துக்கள் ......