(Reading time: 1 - 2 minutes)

கவிதை - ஏ னி ந் த  மு ர ண் பா டு? - ரவை

contradiction

தள்ளாடும் கிழவனைநாம்
தள்ளாதவன் என்கிறோம்!
பல்லாலே செய்ததுபோல்
பல்லாக்கு என்கிறோம்!
பல்கடித்து குழிந்ததுபோல்
பல்லாங்குழி என்கிறோம்!
புல்லாலே ஆனதுபோல்
புல்லாங்குழல் என்கிறோம்!

இருக்கிறதே மரத்தினிலே!
இலையென்று கூறுகிறோம்!
மிருகத்துக்கு வாயிருந்தும்
"வாயில்லா" என்கிறோம்!
பெருங்கோவில் எழுப்பியபின்
"கட உள்" என்கிறோம்!
நிறைவாய் உண்டபின்னே
அசைவம் என்கிறோம்!

கொந்தளிக்கும் சமுத்திரத்தை
" கட"ல் எனவே கூறுகிறோம்!
நொந்துபோன ஏழையினை
தனலட்சுமி என்கிறோம்!
பொந்துக்குள் வாழ்ந்தாலும்
பறவையென சொல்லுகிறோம்!
அந்தமிலா முரண்பாட்டை
அர்த்தமுள்ளதென்கிறோம்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.