(Reading time: 1 - 2 minutes)

புத்தாண்டு 2020 ஸ்பெஷல் கவிதை - வருக, புத்தாண்டு! - ரவை

பொங்கும் செல்வம் எங்கும் பெருகிட
புத்தம் புதிய நல்லாண்டே பொலிக!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ்போல என்றும்
மலர்க!

சாதிச் சழக்கும் பெண்கள் சிதைப்பும்
தீமைப்பெருக்கும் எளியோர் வதைப்பும்
நீதிச் சருக்கும் நேர்மை ஒழிப்பும்
தீயில் பொசுக்கிட படை கொண்டுவருக!

பசியோடு வாடும் பலகோடி மக்கள்!
பிணியினால் சாகும் எளியோரின் வாழ்வும்
வசியும் வளனும் பெற்றே மலர்ந்திட
வருவாய் வருவாய் புத்தம்புது ஆண்டே!

சில்ஸீயும் புத்தாண்டில் சிறப்பாய் செழிக்க
சிறப்பாக கதைகூறும் நல்லோர் சிரிக்க
பல்வேறு வழிகாட்ட புத்தாண்டே பொலிக!
சொல்வேந்தர் எழுத்தும்
சிறப்பாய் மலர்க!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.