கவிதை - நிழலின் பிரதிபலிப்பு - கலைச்செல்வி அறிவழகன்
இயற்கை வண்ணங்களின் பிரதிபலிப்பு
நேற்று பெய்த மழை நீரினில்
உன் காதல் எண்ணங்களின்
பிரதிபலிப்பு என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிலும் அதிகமாக
குளிரினில் நடுங்கிடும் மலராக
உன் இதமான அணைப்பினில்
என் கனவுகள் பிரதிபலிக்க
என்று வரும் இனிய நேரம்?