(Reading time: 2 - 3 minutes)

கவிதை - ஆகிறேன் நானும் அடிமையாய் - யாசீன்

baby

பத்து திங்கள் பத்திரம் பண்ணி
பாரினை பார்க்க பகலவனாய் வந்துதித்த பவளமாம்...
பாவை நானோ கண்ணிமைக்காமல்
பார்த்துக் ரசிக்கும் பட்டுக்குட்டி...

அழகு செல்லம் அள்ளிக் கொள்ள
ஆசை நெஞ்சம் துள்ளுதே...
அன்று கண்ட கனவு எல்லாம் 
அணுவணுவாய் பழிக்குதே...

பஞ்சு உடலும் பிஞ்சு விரலும் 
பக்குவமாய் தொட்டு பார்க்கிறேன்.. 
பாலகன் அவனோ பதறுவான் என
பதுங்கி நானும் நடக்கிறேன். ...

கட்டில் மேலே கண்மணி நீயும். ..
கவலையின்றி களைப்புமின்றி
கண்ணத்தில் கை வைத்து..
கண்ணயர்வாய் பதுமை போல்..
இடையிடையே சிணுங்களும்
அளவில்லா புன்னகையும்....

செல்வம் நீயும் வந்தாய் என்
வாழ்வில்...வசந்தம் இன்றும் என்றும். ...சுமக்கவில்லை நானும் உன்னை ...இருந்தும் தாயாய் மாறுகின்றேன்...

வஞ்சி மகள் பிஞ்சி உன்னை
மார்பில் அணைக்கும் நேரமதில்
கொஞ்சி நீயும் சாயும் போது 
இயல்பாய் இதயம் தாலாட்டுமே...

ஆழ்கடலில் திறந்த
சிப்பிக்குல் முத்து போல்...கலக்கம் இல்லா நீ  கண்துயர...
பாதகி நானோ உறைந்து போவேன்
உன் மேல் ஓராயிரம் கண்திருஷ்டிகள்...

வீட்டிற்குள் ஓயா உன் ஓசையும்....
உன் மேணியில் ஒட்டிக் கொள்ளும் பால் வாசனையும்...
பாஷைகள் பல இருந்தும் ஏனோ நானும் பயில்கிறேன் உன்
மழலை மொழி...

வாழ்வின் கதியதனில்
சறுக்கி விழும் பொழுதுகளில்
ஏனோ மனது உன்னை தேடும்..
உன் கன்னக்குழி சிரிப்பில் தொலைந்து விட...

தொப்புள்கொடி உறவல்ல..
இருந்தும் நீயின்றி தவிக்கின்றேன்...
சிந்தனைகள் பல சிதறிச்சென்றாலும்
நிந்தையில் என்றும் உன் முகமே. ...
ஆகிறேன் நான் உன் அடிமையாய்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.