(Reading time: 2 - 3 minutes)

கவிதை - என்றும் ஏணிகளாய்...... - யாசீன்

ladder

கடந்து வந்த பாதைகளை
எட்டி பார்க்கும் தருணமதில்
கடல் கடந்து சென்றாலும் 
கனல் கொண்டு அழித்தாலும் 
கற்றுத்தந்த ஏணிகளை 
கயல் என்றும் மறக்குமா?

கற்றது கையளவு என்றாலும் 
காட்டாறு போன்ற அனுபவங்களால்
கச்சிதமாய் எம்மை சிலை வடித்து
காண்பவர் முன் தலை நிமிர வைத்தது எம் ஏணிகள் தான்.

கண்ணாடி முன்னால் நான் நின்றாலும். ..
கண் முன் தெறிவது என் விம்பம்
என்றாலும் .....
கை வைத்து என் நெஞ்சை நான் கேட்டால்....
கண்ணியம் கற்பித்தது என்
ஏணிகளே.....

கண்டவர் கட்டிய பல கதைகள்
கண்களில் கசிந்த பல துளிகள்....
கை கொண்டு துடைத்தீர்
கவலைகளை...
காலங்கள் இன்றும் பதில் சொல்லும்....

கருவறை சுமந்தவள் தாய் என்றாலும் ....
கடந்த ஈராறு வருடமதில்...
கணந்தோறும் நெஞ்சில் சுமந்து
கல்விக்கடலில் கரை சேர்த்தீரே...

கானக பூவாய்  வீற்றிருந்த எம்மை
காவல் அரணாய் நீர் நின்று ....
காற்றோடு நாம் போராட
கடிவாலம் என்றும் தந்தவர்களே....

கடும் சொல்லும் கனல் பார்வையும்
காலசோதனயால் பல கேட்டும்...
கடுகளவும் கலங்காது
கல்லாக்கினீர் எமக்காய் உம் நெஞ்சை ....
கற்றவர் கற்றவர் தான் என
கண்ணியமாய் சொல்லாமல் சொன்ன எம் ஏணிகள். ..

கட்டற்று நாம் உயர
கடுகளவும் எதிர்பார்புகளின்றி
அனுதினமும் எம் உயர்வுக்காய்
அர்பணமானீர் என்றும் எம்மை உயத்தும் ஏணிகளாய்......

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.