Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - மாற்றம் தேவையா? - ப்ரியசகி - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - மாற்றம் தேவையா? - ப்ரியசகி

உணவளித்த விளைநிலங்களும் இன்று

வானளாவிய கட்டிடங்களாய்...

ஓடியாடிய பொட்டல் காடுகளும் இன்று

அளந்து பிரிக்கப்பட்ட மனைகளாய்...

கரை உடைத்து வெள்ளமாய் ஓடிய

வாய்க்கால் வரப்புகளும் இன்று

வறண்ட பாலைவனமாய்...

நிலாச்சோறு உண்டு, அருமையான கதைகள்

கேட்டு இன்பமாய் பொழுது கழித்த வீட்டின்

முற்றங்களும் தகர்க்கப்பட்டு இன்று

விரிவுபடுத்தப்பட்ட சாலைகளாய்...

வழியெங்கும் நெருக்கமாய் நிழற்கொடை

அளித்த மரங்கள் இரக்கமில்லாமல் வெட்டப்பட்டு

இன்று அனல் கூடத் தாங்காத நிழற்குடைகளாய்...

மனிதர்களோடும் இயற்கையோடும் ஒத்து

வாழாமல், மாற்றம் எனும் வேலிகளுக்கு அப்பால்  

நின்று இயந்திரங்களோடு வாழப் பழகி விட்டோம்...

மாற்றம் என்பது நன்மையைத் தர வேண்டும்

இன்பமாய் இருந்த நன்மைகளை வேரறுத்த

இந்த மாற்றம் தேவையா?

Pin It

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: கவிதை - மாற்றம் தேவையா? - ப்ரியசகிmadhumathi9 2019-11-02 11:02
:clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மாற்றம் தேவையா? - ப்ரியசகிப்ரியசகி 2019-11-02 11:25
Thank you🙂
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மாற்றம் தேவையா? - ப்ரியசகிJeba 2019-11-02 10:22
தேவையில்லாத மாற்றங்கள் சகி... இன்பத்தை பறித்து விட்டு வெறுமையை பரிசளித்த மாற்றங்கள்... வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மாற்றம் தேவையா? - ப்ரியசகிப்ரியசகி 2019-11-02 11:25
ஆமாம். நன்றி 🙂
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மாற்றம் தேவையா? - ப்ரியசகிரவை.l 2019-11-02 09:09
ப்ரியசகிம்மா! சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள், பிழை செய்யும் சமூகத்துக்கு, சுயநலவாதிகளுக்கு, அரசியல் பிழைத்தோர்க்கு, ..........! சபாஷ்! ஒவ்வொரு அடியும் மரண அடி! எதையுமே மறுக்கமுடியாது! எடுத்த சவுக்கை தொடர்ந்து வீசுங்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மாற்றம் தேவையா? - ப்ரியசகிப்ரியசகி 2019-11-02 09:47
நன்றி ஐயா... தங்கள் பகிர்வும் ஊக்கமும், எழுதும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கின்றது 🙂
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top