(Reading time: 1 - 2 minutes)

கவிதை - உறவுகள்... - சிந்துஜா

தொப்புள் கொடி ஆதாரத்துடன்

           தொடங்கிய உறவு அம்மா

அகட்டில் ஆரம்பித்து அதீத

           அன்பினை கொண்ட அப்பா

பங்கு போட சண்டையிடும் தங்கை

           சண்டையிட்டாலும் விட்டுக்கொடுக்கும் அண்ணன்

மார்பில் சுமந்து தூங்க வைக்கும் தாத்தா

       வகைவகையான உணவுகளையும்,

வயதிற்கு ஏற்ப கதைகளை கூறும் பாட்டி

       தோளில் சுமந்து செல்லும் மாயன்கள்

தோதாக இணைந்து பேசும் அத்தைகள்

         இரத்த பந்தத்தினால் ஏற்பட்ட இவ்வுறவுடன்

மனதினால் இணைந்த நட்பு எனும் உறவு

       இதயம் கொண்ட உறவு காதல்

காதல் கொண்ட உறவு குடும்பம்

       குடும்பம் எனும் உறவினுள்

கூட்டமாய் வாழும் குருவிகள் நாம்

        உறவினை அஸ்திரமாய் கொண்டு

கட்டுவோம் கூட்டுக்குடும்பம் எனும் கூடு ஒன்றை.......‌

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.