(Reading time: 2 - 3 minutes)

கவிதை - இது காதல் அல்ல - இந்துமதி

எத்தனையோ முறை எழுத முயற்சித்தும்

உனக்காக நான் எழுதும் வார்த்தைகளெல்லாம்

வெகு சாதாரணமாகத் தெரிகிறது.....

 

நீ உன் தாய்மொழியென பேசிய இந்தியையும் புரட்டிவிட்டேன்

என் பார்வையில் பதிந்த உன் உருவத்தை வார்த்தையாக்க...

நீ படபடவென பேசிய ஆங்கிலத்தையும் அலசிவிட்டேன்

உன் தோற்றத்தின் கம்பீரத்தை எடுத்துச் சொல்ல....

 

இறுதியாய் நீ திக்கித் திணறிப் பேசிய

என் தாய் மொழியான தமிழையே தஞ்சமடைந்து

ஒருசில வரிகளை எனதாக்கியுள்ளேன்....

 

பார்த்தவுடன் என் மனதில் புதைந்துவிட்ட உன் உருவம்...

ஆறடி உயரத்திலும் அழகாய் தெரிந்த உன் குழந்தை முகம்...

நீ அறிந்த மொழியில் அழுத்தந் திருத்தமாகவும்

அறியாத மொழியை தத்தித்தத்தியும் பேசி

உன் குரலின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்...

 

.....இன்னும் எத்தனையோ என் மனதில் தோன்ற

அதை கவிதையாய் எழுத வார்த்தையின்றி நான் திணறுகிறேன்...

என்னுள் புதைந்த உன் முகத்தை மீண்டும் ஒருமுறை என் கண்ணெதிரே கண்டுவிடத் தோன்றுகிறது...

 

வாய்ப்பளிப்பாயானால் நிச்சயம் என் மனதின் எண்ணங்களை வார்த்தையாக்கி அதை உனக்கு பரிசளிப்பேன்....

இது காதல் அல்ல

ஒரு ரசிகையின் ரசனை.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.