கவிதை - சின்ன சின்ன குழந்தை - ரஹீம்
சின்ன சின்ன குழந்தை
சிங்கார குழந்தை!
பிஞ்சு பிஞ்சு கைகள் செல்லம்
கொஞ்சும் குழந்தை!
குட்டி குட்டி கால்கள் தத்தி நடை போடும் குழந்தை!
முத்து முத்து கண்கள் மின்னல் ஒளி குழந்தை!
அழகாய் சிரிக்கும் குழந்தை
என அமுது குட்டி குழந்தை!