(Reading time: 1 minute)

இப்படிக்கு காதல்.... - சுபஸ்ரீ

 love

காதலாகிய நான் உங்களோடு சில வார்த்தைகள்....

 

ஆண்டவனும் படைக்கவில்லை என்னை

அறிவியலும் கண்டுபிடிக்கவில்லை.

 

ஜாதி மதம் என்ற பேதம் இல்லை

ஜாதகமும் எனக்கு இல்லை

 

சில சாமியார்களின் ஆதரவும் உண்டு எனக்கு

பல மாமியாரின் எதிர்ப்பும் உண்டு.

 

காதலர்களுக்கு ஏமாற்றமும் தோல்வியும் உண்டு

காதலாகிய எனக்கு இவ்விரண்டுமே இல்லை

 

கன்னியரை காமத்துக்கு இறையாக்கி காதலுக்கு

களங்கம் கற்பிக்கும் கயவர்களே

 

புகழ் சேர்க்கவில்லை எனினும் பரவாயில்லை

பழி சேர்த்துவிடாதீர்கள் எனக்கு.

 

இப்படிக்கு காதல்....

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.