(Reading time: 1 - 2 minutes)
humanity

கவிதை - காதல் பேச காத்திருக்கிறேன் - பிரவீண் பாலி

உருவமில்லா கற்பனையாய் உன் முகம் தொலைப்பேசியிடம் உன் வார்த்தைகள் கேட்கிறேன்

 

காணப்பசி எடுக்கும் என் கண்களுக்கு உன் புகைப்படம் ஒரு 

நொறுக்குத்தீனியே

 

கரும்பலகையில் கிறுக்கி தேயும் சுண்ணாம்பாய் தேய்கிறேன் உன்னை தேடி 

 

எண்ணிப்பார்க்க நினைக்கும் மனமும் அழுகிறது 

எண்ணங்கள் போதாதென்று 

 

இமைகள் மூட நினைத்தாலும் 

கண்கள் பார்க்க துடிக்கிறது 

 

உள்ளம் வெட்கமடைந்தாலும் உதடுகள் பேச கேட்கிறது 

 

பொருள் புரியா மொழி ஒன்றில்

காதல் பேச காத்திருக்கிறேன் உனக்காக....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.