(Reading time: 4 - 7 minutes)

   என்றும் என் நினைவில் நீயடி - 2

                                       - NILA RAM

 

“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ''

 

தன் அம்மா அப்பாவின் சண்டையை எண்ணி உள்ளுக்குள் சிரித்து கொண்டே தன் காரில் ஆபீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த நித்திலா.இருந்தும் தன் உள் மனதில் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே தன் இருந்தது . ஏதோ ஒரு நெருடல் , தன் மனதிற்கு பிடித்தும் பிடிக்காத ஏதோ ஒன்று நடக்க போவதை போன்று . இன்று நடக்க இருக்கும் மீட்டிங் அவள் கம்பெனியின் மிக பெரிய டீலிங். இது கிடைத்தால் அவள் எதிர்பார்த்தது போன்ற உயரத்தை அவள் கம்பெனி அடைந்து விடும்.

(ஹலோ என்ன மா நீ ஹீரோயின் இன்ட்ரோடுக்ஷன் அப்பறம் அந்த பொண்ண பத்தி எதுவுமே சொல்லாம பில்ட்அப் குடுத்துட்டு இருக்கானு நீங்க கேக்கறது நல்லாவே கேக்குது . ஹி ஹி ஹி என்ன பண்ணறது இது manufacturing defect , ஒன்னும் பண்ண முடியல , சரி சரி திட்டாதீங்க நா ஹீரோயின் பத்தி சொல்லிடறேன் , அப்படியே ஒரு கொசு பத்தி சுத்துங்க.)

அவள் நித்திலா அம்மா ஜானகி அப்பா ராம் குமார் கணவன் மனைவி இருவரின் அன்புக்கு இலக்கணமாய் பிறந்தவள் நித்திலா இளையவள் நிக்கிலா ( நிகிலாவை பற்றிய விவரங்கள் அப்பறமா சொல்லறேன் ).  ராம் குமார் அக்கௌன்ட் படிச்சு முடிச்சிட்டு ஒரு தனியா Nila Tax Advisors என்ற கம்பெனி நடத்தி வருகிறார் அம்மா ஜானகி பி.எஸ் சி  சைக்கோலஜி முடிச்சுட்டு வீட்டுல ஹவுஸ் வைஃப் ஆ இருக்காங்க . நித்திலா காஸ்ட்யூம் டிசைனிங் முடிச்சிட்டு நிலா கார்மெண்ட்ஸ் கம்பெனி நடத்திட்டு வர ஒரு சக்ஸஸிபியூல்  பிசினஸ் வுமன். நித்திலா வின் அழக அவங்க ஹீரோ தா வர்ணிப்பாங்கலாமா பா விடுங்க நம்ம கதைக்கு போவோம்

அந்த அழகான கம்பெனியின் முன் தன் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள். அவள் வருவதை கண்டா அவள் பி.ஏ. அபி .

''குட் மோர்னிங் மேம''

''குட் மோர்னிங் அபி, இன்னைக்கு மீட்டிங்க்கு தேவையானத எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களா''?

''எஸ் மேம் , எல்லாம் ரெடியா இருக்கு.''

''ஓகே அபி , என்னோட டேபிள் மேல வெச்சுடுங்க நா ஒரு தடவ செக் பண்ணிடறேன்'' .

''சூர் மேம் நா வெச்சிடறேன''.

தன் பி.ஏ விடம் பேசி கொண்டே தன் இடத்தை அடைந்து அவள் முடிக்க வேண்டிய சில வேலைகளை முடித்து விட்டு , இன்று நடக்க போகும் மீட்டிங்கு தேவையான விஷயங்களை படித்து கொண்டுஇருந்தால் . அது கோய்ம்பத்தூரில் உள்ள பெரிய நிறுவனங்களில் ஒன்று . அது AN கார்மெண்ட்ஸ் . நாம் அன்றாடம் உடுத்தும் உடைகளில் 90 க்கும் மேற்பட்டவை இவர்களின் நிறுவனத்தில் உற்பத்தியானவை . அவர்களின் புது ப்ராஜெக்ட் விஷயமாக நித்திலாவின் உதவியை எதிர் பார்க்கின்றன காரணம் அவளின் சில உடை டிசைன் அவர்களுக்கு பிடித்ததே.

பைலை பார்த்து கொண்டிருந்தவளுக்கோ ஏன் இவர்கள் கோயம்பத்தூரில் இருந்து சென்னை வந்து இந்த ப்ரொஜெக்ட்டை நமக்கு தர போகிறார்கள் என்று யோசித்து கொண்டு இருந்தால்.

தன் சந்தேகத்தை தன் உதவியாளரிடமும் கேட்டாள் .

 மேம் நமக்கு இது ரொம்ப பெரிய வாய்ப்பு நீங்க இதல்லாம் யோசிக்காதிங்க வாங்க  அவங்க எல்லாம்  வந்துட்டாங்க  நாம  போலாம்   என்று கூறினால் . பாவம் அவள் பேச்சை கேக்காமல் அந்த கம்பெனியின் மத்த விபரங்களை பார்த்திருந்தால் அவளுக்கு வர போகும் சங்கடத்தை தவிர்த்திருக்கலாம் . இருவரும் மீட்டிங் ஹாலை அடைந்த போது அங்கு அனைத்தும் தயாராக இருந்தது . அனைவருக்கும் தன் காலை வணக்கத்தை தெரிவித்து கொண்டால் .

பின் மீட்டிங் தொடங்கும் வேலையில் தன் உடையை சரி பண்ணியவாறே வந்தான் அந்த இளைஞன் . வந்ததும் நித்தியை போலவே அனைவருக்கும் தன் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டான்.

பின்  அனைவரிடமும் ''சாரி கைஸ் கொஞ்சம் லேட் ஆயிடிச்சு . ப்ளீஸ் மீட்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க'' என்றவாறே தன் இருக்கையில் அமர்ந்தான் அந்த ஆறடி இளைஞன் .

அவன் உள்ளே வந்ததில் இருந்தே அவனை வெச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்  நித்திலா. ஏதோ உறுத்த நிமிர்ந்தான் அவன் .இப்பொழுது அந்த இளைஞனும் அவளை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன் உதடு தனவே உச்சரித்தித்தது நீத்து என்று .

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.