Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)
Pin It

பொட்டிக்கில் வேலை அதிகமாக இருக்கும் போது லட்சுமி என்று இன்னொரு பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொள்வார்கள்..

இப்போது சுந்தரி செல்விக்கு இங்கு வேலை இருந்ததால் லட்சுமியை முழு நேரமாக பொட்டிக்கில்  வேலைக்கு அமர்த்தினர்..

மிதுர்வனின் கைப்பிடியில் மெய்மறந்து சில நிமிடம் நின்றவள் அவனிடம் சாரி சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டாள்..

அதைப் பார்த்துவிட்ட சுந்தரியும் கிறிஷ்டியும் அவளைக் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்..

என்ன தன்யா சாரை  புதிதாகப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டு நிற்கிறாய்..

அது என்னவோ சாரை எப்பொழுது பார்த்தாலும் புதிதாக தான் தெரிகிறார் கிறிஸ்டி அக்கா லண்டனில் எப்படியும் அவருக்கு நிறைய கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருந்திருப்பார்கள் இல்லையா அக்கா..

நம் எம்டியுடைய அழகுக்கு கண்டிப்பாக இருந்திருப்பார்கள் அதில் என்ன சந்தேகம் என சிரித்தாள்..

அவன் கண்கள் ஒன்றே போதுமே அவனின் கண்களில் என்ன ஒரு காந்தசக்தி ஒரு நிமிடம் அவன் கண்களை விட்டு என் கண்ணை நகர்த்த முடியவில்லையே இனி அவனிடம் கவனமாக இருக்க வேண்டும் அவனை பற்றிய யோசனையில் பெருமூச்சு விட்டாள்..

அவளை கவனித்துவிட்டு சுந்தரி அக்கா பேப்பர் எல்லாம் பறக்குது பார் பிடி பிடி என்க இவளும் சுயநிலையை அடைந்து எங்கே என்று தேட எல்லோரும் இவர்களைப் பார்த்து சிரித்தனர்..

சைதன்யா சுந்தரியை கோபமாக பார்க்க இல்லை அக்கா ரொம்ப தீவிரமாக யோசித்து பெரிதாக பெருமூச்சு விட்டாயே எங்கே எல்லாம் பறந்து விட போகிறதோ என பிடிக்கச் சொன்னேன் என சொல்ல மறுபடியும் சிரிப்பலை எழுந்தது..

உன்னை., என்று அவளை அடிக்க துரத்த அவள் நிற்காமல் ஓடினாள்..

அவளை பிடிக்க போய் மறுபடியும் அவனை இடித்துக் கொண்டவள் இம்முறை சுதாரித்துக்கொண்டு சைதன்யா நின்றுவிட்டாள்..

"என்ன இன்னைக்கு என்னை இடிக்க வேண்டுமென்று வேண்டுதல் போல" என சிரித்துக்கொண்டே சென்று விட இவள் தான் அவன் சிரிப்பால் தடுமாறிப் போனாள்..

என்ன அழகாக சிரிக்கிறான் அவன் சிரிக்கையில் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல என்னமா இருக்கிறான்..

சைதன்யா சுந்தரியை பார்க்க அவளும் அவனை ஆவென பார்த்தபடி நின்றிருந்தாள்..

அவளை உலுக்கி சுயநினைவுக்கு கொண்டுவர அவன் போன திசையையே பார்த்தபடி சிரிக்கும் போது சார் செம ஹாண்ட்ஸமாக இருக்கிறார் அக்கா..

அவள் தலையை தட்டி அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றாள் சைதன்யா..

இப்பொழுது ஐடி கம்பெனி ஆரம்பித்து தீவிரமான வேலை சென்று கொண்டிருந்தது..
இரு தொழில்களையும் ஒரே நேரத்தில் தொடங்கியதால் அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் வந்துவிட்டது..

அதனால் மூச்சுக்கூட விடமுடியாமல் ஓடிக் கொண்டிருந்தான் அவன் சோர்ந்து அமர்கையில் அவனை மடிமீது வைத்து தலையை தடவிக் கொடுக்க ஆசையாக இருக்கும்..

ஆனால்  உடனேயே என்ன மாதிரியான ஆசை இது என தன்மீதே கோபம் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள்..

தான் இப்படி எல்லாம் யோசிப்பது அவனுக்கு மட்டும் தெரிந்தால் நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம் என துரத்தி விட மாட்டானா..

அவன் பக்கம் செல்லாதிருப்பதே நமக்கு நல்லது அவள் முடிவு எடுத்தாலும் அவன் விட வேண்டுமே எவ்வளவு சோர்வாக இருந்தாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவளுக்கு அழைப்பு வந்துவிடும்..

வேலை எப்படி நடக்கிறது என அவன் கேட்க என்ன வேலை நடக்கிறது என்று விளக்கி கொண்டிருப்பாள் அவனோ இவளை பார்த்த வண்ணமிருக்க இடையில் குறுகுறுப்பை உணர்ந்து அவனை பார்த்து ஒரு கணம் தடுமாறி என்னவென்று கேட்டாலும் பார்வையைத் திருப்பிக்கொண்டு மேலே சொல்லுமாறு கேட்பான் சில சமயம் அவன் கவனித்ததற்கு அறிகுறியாக சிறு சந்தேகம் கேட்பான்..

அன்றும் அவ்வாறு விளக்கிவிட்டு அறைக்கு வருகையில் சந்தோஷ் அவளுக்காக காத்திருந்தான்..

விழாவிற்கு தேவையான டெக்கரேஷன்களில் ஒரு சிலது துணிகளால் செய்யலாமென முடிவெடுத்திருந்தார்கள்.. அதையும் கூட இப்போது ரெடி செய்து கொண்டிருந்தார்கள்..

என்ன தன்யா உனக்கு வேலைகள் எந்த அளவில் போய்க்கொண்டிருக்கிறது.. என்னோடது ஓரளவு முடிந்திருக்கிறது சந்து டிசைன்களை வரைந்து ஒவ்வொன்றுக்கும் மாடல் சின்னதாக தைத்து பைல் பண்ணிவிட்டேன்..

அவர்கள் வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள் ஏதோ பூஜையாம் அப்பொழுது குடும்பத்தினர் எல்லோரும் இருப்பார்கள் ஒன்றாகவே அளவெடுத்து விடலாம் என கூறினார்கள்..

அன்று நானும் கிறிஸ்டியும் சென்று வரலாமென யோசிக்கிறோம் நீயும் கூட வந்தால் தைரியமாக இருக்கும்..

என்ன தனு நீயே இப்படி சொன்னால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது சரவணனுக்கு வெளிவேலைகள் ஓரளவு முடிந்து விட்டது இப்போது என்னோடு சேர்ந்து உதவுகிறான்..

ஆனாலும் வரவேற்பு முதல் முடிவு வரை நான் தான் பார்க்கவேண்டும் விழாவை தொகுப்பதற்கு ரஞ்சனியிடமே கேட்டிருக்கிறேன்..

அலங்கார வேலைக்கு ஒரு சிலது துணியினால் செய்ய சொன்னேனே அதை செய்து விட்டாயா..

ஓரளவு ரெடி பண்ணிவிட்டேன் நீ வந்து பார்த்து கரெக்சன் சொன்னால் அது முடிந்து விடும்..

இந்த வேலை முடித்தவுடன் நான் பெரியவர்களுக்கான ஆடை வடிவமைப்பை  தொடங்க வேண்டும் பிறகு நேரம் இல்லாமல் போய்விடும்..

வெளியூரிலிருந்து வருகிறவர்களுக்கு ஹோட்டல் புக் செய்து விட்டாயா..

இல்லை தனு  அந்த வேலையாகத்தான் அலைகிறேன் நீயும் வந்து பார்த்துவிட்டு ஓகே சொன்னாயானால் புக் செய்து விடுகிறேன்..

சரி நாளை போகலாம் என்றாள் தன்யா..

இங்கே உனக்கு எல்லாம் வசதியாக இருக்கிறதா தனு..

சந்து உன்னை பார்க்க முடியவில்லை என்பதை தவிர எல்லாம் ஓகே தான் சுந்தரி செல்வி இல்லாமல் இப்போது இன்னும் மூன்று பெண்கள் உதவிக்கு இருக்கிறார்கள்..

டெக்ஸ்டைல்ஸ்கான வேலை ஆரம்பித்தவுடன் இன்னும் இரண்டு பெண்கள் அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள்..

சுந்தரி அங்கு வர சந்தோஷை பார்த்துவிட்டு என்ன சார் எப்படி இருக்கிறீர்கள் உங்களைப் பார்த்தே நாளாகி விட்டதே..

ஏன் கேட்க மாட்டாய் நான் தான் உங்களுக்கு பாஸ் என்பதே மறந்து விடுவீர்கள் போலவே பேசாமல் லட்சுமி இடத்தில் நாளையிலிருந்து சுந்தரியை அமர்த்தி விடுவோமா..

" என்ன" என அதிர்ச்சியான சுந்தரி இப்பொழுதுதான் நல்ல பாஸ்ஸிடம் வேலை செய்கிறேன் அது உங்களுக்குப் பிடிக்கவில்லையா உங்களுக்கு என்னதான் என்மேல் ஓரவஞ்சனையோ என்க சைதன்யா வாய்விட்டு சிரித்தாள்..

முதலில் புரியாமல் முழித்துவிட்டு பிறகு சந்தோஷும் அவர்களோடு சேர்ந்து சிரித்தான் அவர்கள் சத்தம் அறையை தாண்டி கேட்க அந்தப் பக்கமாக வந்த மிதுர்வன் சைதன்யாவின் சிரிப்பையும் அவனோடு சேர்ந்து சிரித்த சந்தோஷையும் பார்த்துவிட்டு முகம் கடினமுற அங்கிருந்து சென்றான்..

அதன்பிறகு அங்கு வந்த கிறிஸ்டி தன் பங்குக்கு அவனை வார எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்..

என்ன தன்யா இந்த வேலைகளில் உன்னுடைய பொட்டிக் வேலைகளை கவனிக்கிறாயா இல்லையா..

அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருக்கிறேன் கிருஸ்டி என்னை தேடி வருகிற கஷ்டமர்களை நான்தான் பார்க்கவேண்டி இருக்கிறது..

துணிகளை கட்டிங் செய்ய இங்கே அனுமதி வாங்கி செய்துவிடுகிறேன் மீதி வேலைகளை லட்சுமி கவனித்துக் கொள்கிறாள்..

இவர்களின் டெக்ஸ்டைல்ஸில் என்னுடைய டிசைன்கள் வந்துவிட்டால் ஓரளவு அங்கேயும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்..
அதற்கு பிறகு பொட்டிக்கை பெரிது பண்ணி விடலாம் என  யோசித்திருக்கிறோம்..

அதோடு சந்தியா பெங்களூரில் ஒரு பிரான்ச் திறக்க சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறாள்..  அதற்கான வேலைகளிலும் சந்து அவ்வப்போது முயற்சி பண்ணி கொண்டு இருக்கிறான்..

அதுசரி கிருஸ்டி உனக்கு பெங்களூரு தான் பூர்விகமா..

இல்லை தன்யா என் பேரன்ட்ஸ் வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. அதனால் பெங்களூரில் வந்து வேலை தேடி அப்படியே செட்டில் ஆகிவிட்டார்கள்.. அம்மா இந்து அப்பா கிறிஸ்டியன்..

எனக்கு இந்தத் துறை பிடித்ததால் இதை தேர்ந்தெடுத்தேன் மிகவும் கடினப்பட்டு தான் இவர்கள் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்..

அதற்கு முன்பு பல கம்பெனிகளில் வேலை பார்த்திருக்கிறேன் பல கட்ட தேர்வுக்கு பிறகு தான் என்னை தேர்ந்தெடுத்தார்கள்..

ஆனால் உனக்கு பரவாயில்லை தன்யா நிரஞ்சனா மேடமால் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது..

வெகுநாள் முயன்று கட்டுக்குள் வைத்திருந்த கவலை தலைதூக்கியது ஏற்கனவே சைதன்யாவிற்கு தன்னை கட்டாயப்படுத்தி தான் நிரஞ்சனா கம்பெனிக்குள் வேலைக்கு சேர்த்திருப்பாளோ என தோன்றியது..

அதனால்தான் தன்னிடம் இதுவரை கம்பெனி சம்பந்தமான வேலைகள் எதுவும் கொடுக்கவில்லையோ என நினைத்தாள்..

இதில் கிறிஸ்டியின் கூற்று அதுதான் உண்மை என்பது போலிருந்தது அவளுக்கு மிகவும் கவலையை அளித்தது.. 

மேலும் பெங்களூருவில் புதிதாக கடை துவங்க தன்னால் முடிந்த உதவியை செய்வதாக கூறினாள்..

சந்து கிறிஸ்டிக்கு நன்றி சொல்லிவிட்டு.,  நாளைக்கு அழைக்க வருவதற்கு முன் போன் செய்கிறேன் தன்யா எனக்கூறி கிளம்பினான்..

எல்லோரும் சென்ற சிறிது நேரத்தில் மிதுர்வனிடமிருந்து அழைப்பு வந்தது..

Pin It
Add comment

Comments  
# தொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-7Vinoudayan 2020-08-13 16:17
Nice epi👏 Christi sonnathu pola niranjana recommendation mattum reason illa nu thonuthu :Q: Thanks for this epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# VinoSurya 2020-08-14 11:07
மிக்க நன்றி sis.. :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-7Jebamalar 2020-08-13 14:18
Nice... interesting story... super
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-7Surya 2020-08-13 16:00
Quoting Jebamalar:
Nice... interesting story... super

மிக்க நன்றி sis..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-7Saaru 2020-08-13 13:16
Lovely update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-7Surya 2020-08-13 15:59
Quoting Saaru:
Lovely update

மிக்க நன்றி sis.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-7Surya 2020-08-13 15:59
Quoting Saaru:
Lovely update

மிக்க நன்றி sis..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-7madhumathi9 2020-08-13 10:54
wow nice epi (y) :Q: intha epi kodukka late aagivittathey! :Q: romba velaiyo. :thnkx: 4 this epi.thinamum indraikku pudhu epi koduththu irukkireergala ena check pannuven.eagerly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-7Surya 2020-08-13 12:13
Quoting madhumathi9:
wow nice epi (y) :Q: intha epi kodukka late aagivittathey! :Q: romba velaiyo. :thnkx: 4 this epi.thinamum indraikku pudhu epi koduththu irukkireergala ena check pannuven.eagerly waiting 4 next epi. :GL:


Chillzee team குடுக்குற அப்டேட் தான் sis.. நான் முன்னமே அனுப்பிட்டேன்..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-7madhumathi9 2020-08-13 16:42
(y) ok :thnkx: :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# MathuSurya 2020-08-14 11:04
:-) :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top