(Reading time: 4 - 8 minutes)

 என்றும் என் நினைவில் நீயடி-6

                                       -Nila Ram

பாயு மொளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,

தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா

ஒரு நீண்ட பயணம் இருவருக்குமே தேவை பட்டது , தனது ஜாக்க்குவரில் நித்திலாவுடன் பறந்து கொண்டிருந்தான்  ஆதி .கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகியும் எதுவுமே பேசாமல் வந்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் எப்போவுமே துரு துரு என்று இருப்பவர்கள் இந்த ஆறு வருடங்களில் இவ்வாறு மாரி போனதன் ரகசியம் தான் அவனுக்கு தெரியவில்லை . சில நேரங்களில் மனதில் உள்ள வலிகளுக்கு மௌனமே சிறந்த மருந்தாகும் அதனால் ஆதியும் நித்திலாவை பற்றி சிந்திக்க ஆரம்பித்தான் .

வருடம் 2013 , கோவை .

கோவை எல்லாருக்கும் பிடித்த ஒரு இடம் . இயற்கையை அமைந்த அழகும் , சிறுவாணி தண்ணீரின் சுவையும் , கோவை குற்றாலத்தின் அருவி நீரும் , மருதமலை முருகனின் அருளும் என்றுமே வளமை குறையாத ஊர் தான் கோவை . அழகுக்கு பேர் போன நம்ம கோயம்புத்தூர், கல்லூரிக்கும் பெருமை வாய்ந்த ஒன்று. தரமான கல்வியும் இங்கு இருக்க , ஊரின் அழகும் கருத்தில் கவர தனது கல்லூரி படிப்பை தொடங்க நித்திலா கோயம்புதூரை தேர்வு செய்தாள். எப்பொழுதும் துரு துரு என இருப்பவள் நித்திலா . அனைவரையும் தன் பேசினாலே எளிதாக கவரும் வல்லமை அவளது பிறவில்லையே இருந்தது . அதனால் தான் எங்கு சென்றாலும் அதற்க்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றி கொள்ளலாம் என்று நினைத்தாள் அவள் .  இனி தன் கல்லூரி படிப்பு எப்படி போகுமோ நாம் எவ்வாறு முன்னேற வேண்டும் என்ற எண்ணி கொண்டே தன் அறையில் தூங்கி போனாள்.

அதிகாலை ஆதவன் தன் சோம்பல் முறித்து அனைவரையும் எழுப்பி விட எண்ணி வேகமாக மேல் எழும்பி கொண்டிருந்தான் . பச்சிகளும் தன் இரையை தேடி தன் கூட்டை விட்டு செல்ல , காகங்களும் கரைய , தன்  அதிகாலை நேர ஓட்டத்தை துவங்க சென்றார் அவர் . காலையில் எழுந்ததும் குளித்து பூஜை அறையில் கந்த சஷ்டி கவசத்தை ஓட விட்டு தன் அருமை புதல்விகளை எழுப்ப சென்றார் ஜானகி .

'' நிக்கி எழு பாரு மணி 6  ஆச்சு எழு மா'' என்றார் , நிக்கிலா 12  ஆம் வகுப்பு படிக்கும் இளம் பெண் தான் எப்படியாவது நல்ல மதிப்பெண் எடுத்து IIT சேர்ந்து  விட வேண்டும் என்பது அவளது குறிக்கோள் . அதுக்காக இப்போதிலுருந்தே தன்னை தயார் படுத்தி கொண்டு இருக்கிறாள். எப்பொழுதும் போல இன்றும் சிரித்த முகத்துடனே எழுந்தவள் தன் அன்னையை பார்த்தவாறே ''குட்  மார்னிங் மா , Have A Good Day''  என்று சொல்லி தன் காலை கடன்களை முடித்து கொண்டு தன் அன்னையிடம் இருந்து காபி வாங்கி கொண்டவள் என்ன அம்மா இன்னைக்கும் உன் அருமை மகளை எழுப்பல போல என்றால் இல்ல டா அவளே இன்னும் கொஞ்ச நாள் தா இங்க இருக்க போற அதன் தூங்கட்டுமே என்றாள் . அது சரி எப்போ தா அவளை விட்டு குடுத்துருக்க இன்னைக்கு குடுக்க என்று சலித்து கொண்டே தனது பாடத்தை படிக்க சென்றால் . அப்பொழுது அங்கு வந்தார் ஜானகியின் அம்மா ருக்குமணி அம்மாள் , அவரை கண்ட நிக்கிலா ''போச்சு டா இன்னைக்கு என்ன பஞ்சாயத்து இருக்கோ தெரியலையே . என்று எண்ணியவள் என்ன பிரச்னை வந்தா நமக்கு என்ன நாம எஸ்கேப் ஆக வேண்டியதுதான்.  நிக்கி எஸ்கேப் ''என்று அறையை நோக்கி சென்றாள். சரியாக அந்த நேரம் பார்த்து தன் தூக்கத்தை தொலைத்து அம்மாவின் அன்பான காபி குடிக்க வந்தால் நம்ம கதையின் கதாநாயகி நித்திலா , தூக்கத்தை தொலைத்தவள் அன்று முதல் தன் நிம்மதியை தொலைக்க போவதை அறியாமல் .

அதுவரை சிரித்த முகமாக பேசி கொண்டிருந்த அம்மா திடிரென்று அமைதியானதை கண்ட ஜானகி யோசனையுடன் திரும்பி பார்த்தார் . இதை எப்படி நான் கவனிக்காமல் விட்டேன் . அச்சோ இப்போ எந்த பிரச்னையும் வராம இருக்கணும் கடவுளே அதுக்கு நீ தான் துணை இருக்கணும் வேலா. என்று தன் இஷ்ட தெய்வமான முருகனை துணைக்கு அழைத்தார்  ஜானகி . நித்திலாவை கண்டதும் ருக்குமணி அம்மாளின் முகம் கருத்து விட்டது . உடனே ஜானகி ''அம்மா நீங்க வந்து ரெஸ்ட் எடுங்க நான் காபி கொண்டு வரேன்'' என்று அவரை அவ்விடத்தை விட்டு செல்ல ஆயுதமானார். அதற்குள் தன் தாயிடம் வந்தவள் ''அம்மா ஒரு காபி குடேன் ப்ளீஸ் மா'' என்றாள் . உடனே ருக்குமணி ஏதோ சொல்ல போக ஜானகி தன் அம்மாவை பார்வையாலே அடக்கியவர் , ''நிலா மா நீ போய் பிரெஷ் ஆயிட்டு வ ந காபி போட்டு தரேன்'' என்றார் . நித்திலா சென்ற உடனே ''அம்மா இங்க பாரு நீ நிலா கிட்ட அவளை பத்தின உண்மையா சொல்ல தான் வந்திருக்கான நீ இப்போவே கிளம்பிடு . அவளை இதுவரைக்கு எங்க பொண்ணாவே வளத்திட்டோம் இனியும் அவளை எங்க பெண்ணாகவே வளைத்த போறோம் தயவு செஞ்சு எதையும் அவ கிட்ட சொல்லிடாத'' . என்று தன்  தாயிடம் கெஞ்சவும் அப்போதைக்கு அந்த விஷயத்தை தள்ளி போட்டார். ஆனால் எப்படியாவது இன்று நிலா யாரென்று அவளிடம் சொல்ல வேண்டும் என முடிவுடன் அவர் வந்தது அவருக்கு தெரியாமல் போனது . தெரிந்திருந்தாலோ என்னவோ அடுத்து நடக்க போகும் அசம்பாவிதத்தை தடுத்து இருக்கலாம் .

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.