(Reading time: 11 - 22 minutes)

தோழிகள் மூவரும் ஒன்றாக குழந்தைகள் பிரிவிற்கு சென்றனர். அபியை பார்த்து “அபிக்குட்டிக்கு இன்னைக்கு பர்த்டே வா…” பிரியா கேட்க “ஆமா கா” என்று சிரித்தபடியே அவன் வைத்திருந்த கடலை மிட்டாயை நீட்டினான். அவன் தலையை செல்லமாய் கலைத்துவிட்டு “பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா அபி” என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டு விலகினாள். காவியா சந்தியா இருவரும் முன்பே அபியிடம் பேசி இருந்தனர். இனி ப்ரியா தன்னை சமாளித்துக்கொள்வாள் என்று நினைத்த தோழிகள் இருவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். 

 

காலை உணவருந்திவிட்டு அமர்ந்திருந்த நந்தகோபாலனின் அலைபேசி மருத்துவமனை எண்ணை காட்டி ஒளிர்ந்துக்கொண்டிருந்தது யோசனையாய் அழைப்பை ஏற்று காதில் வைத்தார். 

 

“அங்கிள் நான் நான்சி பேசுறேன்..” 

 

“சொல்லு நான்சி…” 

 

“அங்கிள் நந்தன் வீட்ல இருக்கானா…?” 

 

“என்ன ஆச்சு நான்சி?” 

 

“இல்ல அங்கிள்… இன்னைக்கு அவனோட எல்லா கேஸும் என்னை பார்க்க சொல்லிட்டான். அவன் செய்ய வேண்டிய ஆபரேஷன் கூட என்னை பார்த்துக்க சொன்னானாம் அங்கிள். அது தான் அவனுக்கு வேற ஏதும் இம்போர்ட்டண்ட் ஒர்க் வீட்டுல இருக்கானு கேட்க கூப்பிட்டேன் அங்கிள்” 

 

நந்தன் தன்னிடம் எதுவும் சொல்லாமல் எங்கோ சென்ற கோபத்தில் நந்தகோபாலனிடம் அவனை பற்றி வத்திவைத்து விட்டாள். 

 

நந்தகோபாலனோ “நந்து ஹாஸ்பிடல் தான போனான்னு ஆதி சொன்னான்… இந்த நான்சி பொண்ணு நந்து வீட்ல இருக்கானான்னு கேக்குற?” என்று யோசனையில் “நானே ஹாஸ்பிடல் வரேன் நான்சி... அங்க வந்து பேசிக்கலாம்” என்று பதில் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார். 

 

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் “ச்ச….. நாம ஒன்னு நினைச்சா இங்க ஒன்னு நடக்குதே….. நந்துவை வர சொல்லுவாருனு பாத்தா இவரே வாராராம்…… டேய் நந்து எங்க டா போன? உன்னை பத்தி கேட்டாலும் இங்க யாருக்கும் எதுவும் தெரியலை…..” என்று மானசீகமாய் நந்தனை திட்டிக்கொண்டிருந்தாள். இரவு நேர பணி பார்த்த செவிலியர்களும், மருத்துவரும் காலை ஆறு மணியுடன் வீட்டிற்கு சென்றுவிட வானதியை பற்றியோ கிருஷ்ணப்ரியாவை பற்றியோ நான்சி அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.