(Reading time: 11 - 22 minutes)

நான்சி கூறியதை கேட்டவர் உடனே நந்தனுக்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. (அது எப்படி காவியா கிட்ட பேசுனானே னு நீங்க கேக்குறது புரியுதுங்க…. ஆனா என்ன பண்றது காவியாகிட்ட பேசிட்டு வைச்ச கொஞ்ச நேரத்துலையே அது தன்னோட உயிரை விட்ருச்சு… பாவம் ரெண்டு நாளா அதுக்கு நந்தன் சாப்பாடு போடலையா அது தாங்க.) 

 

"வானதிக்கு கிரிட்டிக்கல் னு சொன்னானே.... அவளுக்கு என்ன ஆச்சுன்னுகூட சொல்லவே இல்லை" என்று யோசித்தவர்… ஐந்து நிமிடத்தில் மருத்துவமனைக்கு செல்ல கிளம்பி வந்தார். 

 

“என்ன மாமா நந்து வந்ததுல இருந்து எப்பவும் வீட்ல தான் இருப்பிங்க… இப்போ என்ன ஹோச்பிடல்க்கு?” என்று கேட்ட அகல்யாவிடம் “வானதியை பார்த்துட்டு வரேன் மா…” என்று மட்டும் சொல்லி தன் காரில் மருத்துவமனை நோக்கி புறப்பட்டார். 

 

“ஹே யாழ் சீக்கிரம் வா…. டைம் ஆச்சு…” என்று கத்திக்கொண்டிருந்தாள் கௌசல்யா. 

 

“அச்சோ கத்தாதே கௌ இன்னும் பைவ் மினிட்ஸ் தான்…” என்று தான் வடிவமைத்த புதிய பிராக்கை போட்டுக்கொண்டு கண்ணாடி முன் நின்றுக்கொண்டிருந்தாள் யாழிசை. 

 

“இதை தான் நீ ஒரு மணிநேரமா சொல்லிட்டு இருக்க…. நீ வரதுக்குள்ள இங்க ஷோ முடிஞ்சுடும் டி” - கௌ

 

“இதோ இதோ வந்துட்டேன் வா போகலாம்” என்று வேகமாய் வந்த யாழிசையை காண கெசல்யாவிற்கே பொறாமையாய் இருந்தது. 

 

அடர்நீல நிற பிராக்கில் இடையை சுற்றிய இடத்தில் மட்டும் வெள்ளைநிறத்தில் அடர்நீல கல் பதித்த பட்டாம்பூச்சியும், அதன் கீழே அடுக்கடுக்காய் துணி மடிப்புகள் தரையை தழுவ, ஆங்காங்கே அதே போன்ற பட்டாம்பூச்சி என பார்ப்பவர் கண்களை பறிக்கும் வகையில் இருந்தது அவள் வடிவமைத்திருந்த ஆடை. இடை வரை நீண்டிருக்கும் கூந்தலை குட்டி குட்டியாக சுருட்டி பூச்செண்டு போல அழகாய் அலங்காரம் செய்திருந்தனர். 

 

அவளோ முழுமதியே தோற்கும் ஒளியுடன், கயல்விழியும், சாயம் பூசிய செவ்விதழும் அழகாய் பேச, பால் நிறத்தில் பெண்களின் சராசரியை விட சற்று உயரமாய் இருந்தாள். அதுவும் அவளது அழகை இன்னும் கூட்டியது. 

 

டெல்லியில் அவர்களது கல்லூரியில் நடக்கும் ஃபேஷன் திருவிழாவிற்காக தான் இப்பொழுது யாழிசை தயாராகிக் கொண்டிருப்பது. 40 பேர் பங்குபெற்ற முதல் சுற்றில் வெற்றிபெற்று முதல் 15 நபருக்குள் ஒருவளாய் வந்திருந்தாள். இதோ கடைசி சுற்றில் ஐந்து நபர்களில் ஒருத்தியாய் நிற்கிறாள். 

 

பயிற்சியின் போதே அவள் வடிவமைத்த அடைகளுக்கு ரசிகர்கள் ஏராளம். அவளது தயாரிப்பு அத்துணை நேர்த்தியாக இருக்கும். இதோ இன்னும் ஒரு வாரத்தில் அவளது படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லவிருக்கிறாள். இந்த போட்டியில் முதல் இடத்தை பெற்று தலை சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற பெயருடன் தன் குடும்பத்தின் முன் சென்று நிற்க கனவு காண்கிறாள். 

 

மிஸ் யாழிசை நந்தகோபாலன் என்ற அழைப்பை கேட்டு கௌசல்யா இரண்டு கைகளையும் வெற்றிக்கான முறையில் உயர்த்தி வாழ்த்துகூற யாழுக்கோ தலை லேசாய் சுற்ற ஆரம்பித்தது. தலையை ஆட்டிக் தன்னை சமன்படுத்தியவளின் அருகில் பதறியபடியே வந்த கௌசல்யாவோ "யாழ்.... என்ன பண்ணுது .? என்ன ஆச்சு...?" என்று கேட்க "தலை லேசாய் சுத்துது கௌ... வேற ஒன்னும் இல்ல" என்று தன்னிலையை விளக்கமளித்தாள்.  

 

"இந்தா முதல்ல தண்ணி குடி" என்று தன் கையிலிருந்த பாட்டிலை நீட்டினாள் கௌசல்யா. நீரை பருகியவள் இன்னும் தெளிவாக அதற்குள் மூன்றாவது முறையாக அவளது பெயரை ஒளிபரப்பி விட்டிருந்தனர். மேடையை நோக்கி வந்தவள் அவளது திறமையை காட்ட நடுவர்கள் அவளிடம் பல கேள்விகளை கேட்டனர். அனைத்திற்கும் சிறப்பாய் பதிலளித்து அனைவரின் கைத்தட்டலையும் பெற்றவள் மேடையிலே மயங்கி சரிந்தாள்.

 

 

(மகிழ்ந்திரு)

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.