(Reading time: 8 - 16 minutes)

 "நீ தனியா குழந்தையை பார்த்துப்பியா?" நந்தன்

 

"பார்த்துப்பேன்" பிரியா

 

"சரி அப்போ நீ ஹோச்பிடல்க்கு வந்துட்டா யாரு இவனை பார்த்துப்பாங்க" என்று அவள் கண்களை பார்த்து கேட்டான் நந்தன்.

 

அதை அவளும் யோசிக்கவில்லையே.... இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வாள் அவள்??? பிறந்த குழந்தையை தனியே வீட்டில் விட்டுவரவும் முடியாது... தினமும் தூக்கிக்கொண்டு மருத்துவமனை வரவும் முடியாதே.... அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாகவே நின்றிருந்தாள். 

 

நந்தனே தொடர்ந்தான் "அவன் இன்னும் டூ மந்த்ஸ் இங்கவே பேபி கேர்ல இருக்கட்டும்.... நீயும் டெய்லி அவனை பார்த்துக்கோ. இப்போ வா வீட்டுக்கு போகலாம்..." என்று அவளை அழைக்க அவளோ அமைதியாகவே நின்றிருந்தாள். 

 

தான் நினைப்பதை செய்ய முடியாமல் தவிக்கும் தன் கையறுநிலையை அவள் அறவே வெறுத்தாள். இன்று நந்தன் என்ன காரணம் சொல்லி அழைத்தாலும் அவனுடன் செல்லக்கூடாது என்ற வீம்புடன் தான் நின்றிருந்தாள். மருத்துவமனையில் அகல்யாவும் இல்லையே எனவே நந்தனை சமாளித்துவிடலாம் என்றே நினைத்திருந்தாள் அவள். 

 

"என்ன கிருஷ்ணா நின்னுட்டே இருக்க வா போகலாம்" என்று அவள் கையை பிடிக்க வந்தவன் கைகளில் அகப்படாமல் தள்ளி நின்றாள் பிரியா. 

 

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.