(Reading time: 7 - 13 minutes)

யாரிடம் தூது சொல்வது -1 - புவனேஸ்வரி கலைசெல்வி

ந்த மலையடிவாரத்தில் சீரான வேகத்தோடு இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தான் அவன் . காதில் சந்தோஷ் நாராயணன் இசையும் , வாகன எரிபொருளும் இருந்தால் போதும் அவனை கையில் பிடிக்க முடியாது . இயற்கையோடு ஒன்றிவிடுவான் அவன் . மாதத்தில் அவனுக்காக ஐந்து நாட்கள் எப்போதும் ஒதுக்கி விடுவான் . அலைபேசிக்கு அதிகம் வேலை வைக்காமல் தனது நெருங்கிய நண்பனிடம் மட்டும் பயணப்படும் ஊரைப் பற்றிய தகவல்களை சொல்லிவிட்டு காணாமல் போய்விடுவான் . அவனுக்கும் இயற்கைக்கும் நடுவில் யாரும் வரவே முடியாது . முடியாது என்பது என்னவோ கடந்த மூன்று வருடங்கள் முன்னால்வரை உண்மைதான் . இன்றோ அவர்கள் இருவருக்கும் இடையில் மூன்றாவதாய் உதித்த இம்சை ஒன்று பெண்ணென்று உருக்கொண்டு அவன் தோளில் தாளம் போட்டு கொண்டே வந்தது .

செவியில் மாட்டும் கேட்பொறிக்கு பதிலாக அவர்களுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் ஒலிப்பெருக்கி வைத்திருந்தான் .

"சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கி போடும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே
உன்ன வெச்சேன் உள்ள
அடி வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான் " பாடலோடு இணைந்து பாடியவனின் பின்னங்கேசத்தை தலைக்கவசத்தை தாண்டி விரல்களால் சீண்ட முயற்சித்து கொண்டிருந்தாள் அவள் . சாலையோரம் பூக்கடை ஒன்று தென்பட ,

" வண்டிய நிறுத்துங்கப்பா ..சீக்கிரம் " என்று அவனை தடுத்தாள் .
தூரத்தில் இருந்தே அவள் பூ கேட்பாள் என்று ஊகித்தவன், கடையைத் தாண்டி வண்டியை நிறுத்தினான் . அவனை மெச்சுதலாய் பார்த்தபடி இறங்கி , தோளில் தட்டியவள் , அவனோடு இணைந்தே கடையை நோக்கி நடக்க ,

" முல்லைப்பூ என்ன விலை ? " என்றான் அவன் சன்னக்குரலில் . அதே கடையின் மறுபக்கம் தனது புகைப்பட கருவியில் கவனம் செலுத்திய பெண்ணொருத்தி அவனது சன்னக்குரலில் கவரப்பட்டு நிமிர்ந்தாள் .

"ப்பா .. செம்ம குரல் .. இன்னும் கொஞ்சம் பேசுங்களேன் " வெகு இயல்பாய் அவள் கேட்டு வைக்க , அவன் பார்வையோ சட்டென தன் பக்கத்தில் நிற்கும் தன்னவள்மீது படிந்தது . முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பூவை தலையில் வைப்பதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தாள் . ஆனால் அவனுக்கு மட்டும் " எரிமலை எப்படி பொறுக்கும் " என்ற பின்னணி இசை கேட்பது போலவே இருந்தது .

அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் , வெகு இலகுவாக முகத்தை வைத்துக் கொண்டு "மணியாச்சு சீக்கிரமா கெளம்பலாமா ?" என்றாள் . அங்கு நின்றிருந்த இன்னொரு பெண்ணை சட்டை செய்யாமல் அவளை பின் தொடர்ந்தவன் ,

"கோவமா பாப்பா?" என்றான் .

" பாப்பா பீப்பான்னு கொஞ்சுறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ..எத்தனை தடவை சொல்லுறேன் , சன்னமா பேசி தொலைக்காதிங்க .. கேட்க அநியாயத்துக்கு நல்லா இருக்குனு .." என்று பொரிந்தவள் , அவனை திட்டினாளா அல்லது ரசிக்கிறாளா என்பது அவள் மட்டுமே அறிந்தது .

" அடியே , அது தானாகவே பேச ஆரம்பிக்கும்போது வருது ..அந்த பொண்ணு சும்மா பேசத்தானே சொன்னிச்சு ? நான் என்ன அப்படியே அவ பின்னாடியா போயிட்டேன் ?" என்று அவனும் அவளைப்போலவே கொதிக்க ,

" போவீங்க போவீங்க .. உசுரோட விட்டாத்தானே போக முடியும் ? இத பாருங்க .. என்னைவிட்டு நீங்க போக முடியாது ..நான் போகவும் விட மாட்டேன் ..நானும் போக மாட்டேன்.." என்று விழிகளை உருட்டி மிரட்டினாள் . அதற்கேதும் பதில் சொல்லாமல் அவளது நெத்தியில் செல்லமாய் முட்டியவன் வண்டியை கிளப்ப மீண்டும் அவர்களுக்குள் அன்பலை பொங்கிது . அவளோடு ஒன்றி பாடிக்கொண்டே பயணித்தாலும் சற்று முன் சொன்ன வார்த்தை மட்டும் அவனுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டே இருந்தது . " இத பாருங்க .. என்னைவிட்டு நீங்க போக முடியாது ..நான் போகவும் விட மாட்டேன் ..நானும் போக மாட்டேன்.." .

லைகளும் மேகங்களும் தாங்கள் தொலைத்தூர காதலர்கள் என்ற எண்ணத்தை கைவிட்டு முத்தமிட்டு காதல் பழகுவது போல இருந்தது அந்த காட்சி . மலை உச்சியில் ஏற்பட்ட காற்றழுத்தமும் குளிரும் அவளுக்குள் புதுவித பரவசத்தை உருவாக்கியது !

இந்த இயற்கையும் தான் எத்தனை அழகு வாய்ந்ததாய் இருக்கிறது ? இயற்கை அன்னைக்கு மூப்பே கிடையாதோ ? அணு அணுவாக அந்த காட்சிகளை ரசிக்க இன்னும் கூடுதல் கண்கள் கிடைத்திருக்கலாம் என்று தானாகவே தோன்றும் எண்ணத்தை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை . தன்னவனை கூட நாடாமல் நடுநாயகமாக மலைமீது நின்று கொண்டு " ஹோ " என்று கத்தி ரசித்து கொண்டிருந்தாள் . இடுப்பில் கை வைத்தபடி வையகத்துக்கே ராணியானது போல மிளிர்வும் நிமிர்வுமாய் நின்று கொண்டாள் . இத்தனையும் தூரமாய் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவனுக்கு இதெல்லாம் இனிமேல் தனக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது . ஏனோ அவளை விட்டு இம்மியளவும் பிரிய விரும்பாதவன் போல, அவளை நோக்கி வேகமாக அடியெடுத்து வைத்து பின்னாலிருந்தபடி இறுக்கி கொண்டான் .

"பாப்பா ..."
"ம்ம்ம்ம் "
" உன்னால என்னை விட்டுட்டு இருக்க முடியுமா ?"
"ம்ம்ஹ்ம்ம்" மறுப்பாய் தலை அசைத்தாள் .
"என்னாலயும் இருக்க முடியாது டா .."
"தெரியுமே .."
"ஆனா "
" என்ன ஆனா ?"
"ஒருவேளை நான் இல்லைன்னா நீ என்ன பண்ணுவ ?"
" நீங்க இல்லாம எங்க போவீங்க ? என்கூடத்தான் இருப்பிங்க "
"நான் தொலைஞ்சிட்டா ?"
" நான் தேடுவேன் .. இந்த பூமியில் சுத்தி சுத்தி தேடுவேன் "
"நீ என் வீட்டுல தான் இருக்கணும் "
" கல்யாணம் பண்ணிக்கோங்க .. இப்போவே போலாம்"
" சொல்றத கேளுடி "
"ம்ம்ம் சொல்லுங்க "
" நான் இல்லன்னா , நீ தனியா இருக்க கூடாது .. நீ என் வீட்டுக்கு போகணும் சரியா ?" என்றவன் தன் இதழ்களுக்கு அதிகமாய் வேலை கொடுத்தான் . எவ்வளவு மென்மையாக அதே நேரம் ஆளுமையோடு அவளை கையாள முடியுமோ அப்படி நெற்றி கன்னமென முத்தங்களை வழங்கிக்கொண்டே தன் ஆசைகளையும் சொல்லி கொண்டிருந்தான் .

" நம்ம வீட்டுக்கு போ .. நீ இன்னும் நெறய படிக்கணும் .. அடிக்கடி என்னை நெனைச்சு பாடணும் .. ஆரோக்கியமா சாப்பிடணும் .. எல்லாரையும் சந்தோஷமா பாத்துக்கணும் .. உன்னையும் கவனமா பாத்துக்கணும் ..நான் இல்லாதப்போ , நீயே நானாக மாறி இருக்கணும்!", ஒவ்வொரு முத்தத்திற்கு இடையில் ஒவ்வொரு கட்டளைகளையும் காதலுடன் பிறப்பித்தான் . அவனையும் அவனது ஆசைகளையும் உள்வாங்கி அவள் வீழிமூடிய நிமிடத்தில் சட்டென அவளை பிரிந்தவன் ,

" உன்ன ரொம்ப நேசிக்கிறேன் பூங்கொடி " என்றபடி அடுத்த அடி பின்னோக்கி வைக்க , "கயல் " என்று அலறி அவனை பிடிக்க முயன்றபடி இன்னும் அலற , அவளை தூக்கத்தில் இருந்து உலுக்கி எழுப்பினார் நிறைமதி .

"பூங்கொடி .. கண்ணை திற .. அழாதேம்மா .. கண்ணை திற ..ஒன்னும் இல்ல ..என்னை பாரேன் " அவர் அழுத்தமாய் உலுக்கியதில் கண் விழித்தவளுக்கு கனவேது , நினைவேது என்று புரியாத ஓர் உணர்வு . அதிர்ச்சியில் பூங்கொடிக்கு நின்ற அழுகை மீண்டும் விம்மலாய் வெடிக்க , நிறைமதியின் மடியில் முகம் புதைத்து கொண்டாள் .

"அவர் எங்க மதியம்மா ? எனக்கு அவரை பாக்கணும் !!"

"கயல் எங்க இருந்தாலும் , வந்துருவான் பூமா..நீ அவன் வீட்டுக்கு போ "

" மாட்டேன் .. அவர் இல்லாமல் நான் போக மாட்டேன் " என்று அவள் அழுகையின் ஊடே கூறிட , அவளது அலைபேசி சிணுங்கி தன்பால் கவனத்தை ஈர்த்தது .

அரவிந்த் ! கயற்சோழனின் ஆருயிர் நண்பன் . கயல் எங்கு பயணம் சென்றாலும் அரவிந்திடம் மட்டும் ஒருவார்த்தை சொல்லி விடுவான் . ஒருவேளை கயற்சோழன் இருக்கும் இடத்தின் தகவல் தெரிந்ததோ என்று பரபரப்புடன் அழைப்பெற்றாள் .

"ஹலோ அரவிந்த்"

"கயல் வீட்டுக்கு நாளைக்கு நீ வர்ற .. நானே உன்னை கூட்டிட்டு போறேன் " என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான் நண்பனவன் !

_தொடரும் _

வணக்கம் தோழமையே , அதிக நெளிவு சுழிவு இல்லாமல் ஒரு சின்ன காதல் தொடர், நமக்காக ! படித்து கருத்துகள் கொடுங்க நன்றி .

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.