(Reading time: 1 - 2 minutes)

இஸ்ரோ – பள்ளி மாணவர்களுக்கு இலவச ஒரு மாத space science and technology certificate

isro

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இலவச ஆன்லைன் விண்வெளி அறிவியல் படிப்புக்கு 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் மாணவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு மாதம் ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்த் கோர்ஸ், 6 ஜூன் 2022 முதல் தொடங்குகிறது.

இது பிரபல விண்வெளி அறிவியலாளர்களால் நடத்தப்படும் ஆன்லைன் படிப்பு. ஒவ்வொரு வீடியோ அமர்வுக்குப் பிறகும் ஒரு வினாடி வினா நடத்தப்படும்.

பாடப் பங்கேற்புச் சான்றிதழைப் பெற, வினாடி வினாவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணும், வீடியோ அமர்வுகளில் 70 சதவீத வருகையும் அவசியம்.

மாணவர்களுக்கு IIRS-இஸ்ரோ சான்றிதழ்கள் வழங்கும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இணையதளம்: https://eclass-intl-reg.iirs.gov.in/schoolregistration

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.