(Reading time: 1 - 2 minutes)

அறிவால் வகுக்க ஆறறிவு கொண்டு
அரிதாய் வந்த உயிராய் ஆனோம் !

வழியாய் நாங்கள் தினம் உரையாடிடவே
மொழியாய் எங்கள் அடையாளம் கொண்டோம் !

பாகுபாட்டை மனிதருள் வளர்த்தோம் -அதை
நாகரீகம் என்றே அளந்தோம் !

இயற்கையால் வாழ்வில் திளைத்தவர் மூத்தோர்
செயற்கையாய் வாழ்வையே நிறுவிட தோத்தோம் !

ஏட்டு அறிவிற்கு சான்றிதழ் தந்தோம்
ஏர் பூட்டியவன் சாவதை கண்டோம் !

பேரங்காடியை வர்த்தக வளர்ச்சியாய் சொன்னோம்
பேரிடர் வருகையில் வறட்சியுடன் நின்னோம் !

தவமென மதங்களை தாங்கி பிடித்தோம்
சவமென நோயினால் சரிந்து குவிந்தோம் !

அண்ணார்ந்து பார்க்கும் அடுத்த தலைமுறையே,
கண்ணயரும்முன் உண்மை கதைக்கேள் ! இங்கு

மரம் உண்டு; விதை இல்லை !
மதம் உண்டு; மனிதம் இல்லை !
பணம் உண்டு; பணிவு இல்லை !
கல்வி உண்டு ; கருணை இல்லை !
வஞ்சகம் உண்டு; வாஞ்சை இல்லை !
வளர்ச்சி உண்டு; வாழ்க்கை இல்லை !

வாழ்க்கை வேண்டுமெனில் வாழ கற்றுக்கொள் ;
மகுடம் நாடாமல் ஆள கற்றுக்கொள் !

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.