(Reading time: 3 - 5 minutes)
சிங்கப்பெண்ணே

Chillzee KiMo Book Reviews - சிங்கப்பெண்ணே - பிந்து வினோத்

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பிந்து வினோத்தின் கதை 'சிங்கப்பெண்ணே'.

நம் Chillzeeயில் தொடர்கதையாக வந்து, இப்போது Chillzee KiMoவில் பப்ளிஷ் ஆகி இருக்கும் கதை இது. 

அந்த கதையின் சுருக்கத்தை தெரிந்துக் கொண்டு, கதையின் + & - களை அலசுவோம் வாங்க.

 

கதை சம்மரி:

தையின் ஹீரோ வைபவ், ஹீரோயின் கல்பனா.

வைபவும் கல்பனாவிற்கும் கல்யாணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். கணவன், குழந்தைகள், குடும்பம் என்று தன்னுடைய உலகத்தை சுருக்கிக் கொண்டு வாழ்பவள் கல்பனா. தொழில்முறையில் சந்திக்கும் ஒரு பெண்ணினால் மனம் தடுமாறுகிறான் வைபவ். எப்படியோ தடம் மாறிப் போகாமல் மனதை அடக்கிக் கொள்கிறான். மனதில் ஏற்பட்ட சஞ்சலத்தை மறைக்காமல் மனைவியிடம் சொல்கிறான்.

அவன் மேல் உயிரையே வைத்திருக்கும் கல்பனா கோபப் படுகிறாள். அவனால் எப்படி அப்படி மனதிலும் யோசிக்க முடிந்தது என்று குமுறுகிறாள். இது அவர்கள் நடுவே சண்டையை கொண்டு வருகிறது. அதே நேரத்தில் வைபவின் பிஸ்னசில் பிரச்சனைகள் வருகிறது. பணப் பற்றாக்குறையை தீர்க்க முதல் முறையாக வேலைக்கு செல்ல நினைக்கிறாள் கல்பனா. 

வேலைக்கு செல்லும் இடத்தில புதிய மனிதர்களை சந்திக்கிறாள். இந்த அனுபவம் அவளுடைய வாழ்க்கை வட்டத்தை பெரிதாக்கியதா? வைபவ் கல்பனா சமாதானமானார்களா என்பது மீதிக் கதை.

 

கதாபாத்திரங்கள்  

தாபாத்திரங்களில் கதையின் முக்கிய கதாபாத்திரமான கல்பனா எளிதாக மனதில் ஒட்டிக் கொள்கிறாள்.

மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே கல்பனாவை சுற்றியே இருக்கிறார்கள்.

கதை அலசல்

+க்கள்

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஸ்பார்க் கட்டாயம் இருக்கும். அதை புரிந்துக் கொண்டு வெளியே கொண்டு வந்தால் அதிசயங்கள் செய்யலாம் எனும்  மோடிவேஷன் பேக்டரை சொல்லும் கதை. 

இது நம் chillzeeயின் 36 வயதினிலே வெர்ஷன் என்றும் சொல்லலாம்.

  

கல்பனாவிற்கு சப்போர்டிவே கதாபாத்திரங்கள் அனைவரையும் டு தி டெபனிஷன் மனிதர்களாக காட்டாமல் குற்றம் குறை நிறைந்தவர்களாக காட்டி இருப்பது கதைக்கு இயல்பை கொடுக்கிறது.

-க்கள்

டெம்ப்லேட்டை விட்டு வெளி வராமல் அதையே ஒட்டி இருக்கும் கதை.

சட்டென்று முடிந்து விட்ட உணர்வை கொடுப்பதை தவிர்த்திருக்கலாம்.

  

மொத்தத்தில், படிப்பவர்களுக்கு நல்ல ஒரு உணர்வை கொடுக்கும் கதை. 

இது வரை படிக்காதவர்கள் கட்டாயம் படியுங்கள்.

 

டுத்து Chillzee KiMo வில் வெளியாகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷின் 'கண்கள் சொல்கின்ற கவிதை' நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

சிங்கப்பெண்ணே போலவே இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள்.

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.