(Reading time: 3 - 5 minutes)
கண்கள் சொல்கின்ற கவிதை
கண்கள் சொல்கின்ற கவிதை

Chillzee KiMo Book Reviews - கண்கள் சொல்கின்ற கவிதை - ஸ்ரீஜா வெங்கடேஷ்

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷின் கதை 'கண்கள் சொல்கின்ற கவிதை'.

அந்த கதையின் சுருக்கத்தை தெரிந்துக் கொண்டு, கதையின் + & - களை அலசுவோம் வாங்க.

 

கதை சம்மரி:

தையின் ஹீரோ ஜீவா, ஹீரோயின் கயல்விழி.

ஜீவாவின் குடும்பம் பணக்கார குடும்பம் என்று பெயர் பெற்றது. தான்தோன்றித்தனமாக நடந்து சொத்தை எல்லாம் அழித்து விடுகிறார் அவனுடைய அப்பா.

ஜீவாவும், கயல்விழியும் காலேஜில் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். அவர்களுடைய காதல் இரண்டு குடும்பத்திற்கும் தெரிய வருகிறது. ஜீவா ஐ.ஏ.எஸ் படித்து முடித்த பிறகு கல்யாணம் செய்வது என்று முடிவு செய்கிறார்கள். கயல்விழி தன் சொந்த பணத்தைக் கொடுத்து ஜீவாவை படிக்க வைக்கிறாள். அவனும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிப் பெறுகிறான். ட்ரெய்னிங் முடித்து திரும்புபவனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. கயல்விழி ஜீவாவை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்று கடுமையாக் லெட்டர் எழுதி விட்டு அங்கிருந்து மறைந்து போய் விடுகிறாள்.

கயல்விழி ஏன் அப்படி ஒரு முடிவுக்கு வந்தாள்? அதற்கு யார் காரணம்? ஜீவாவும் கயல்விழியும் சேர்ந்தார்களா என்பது மீதிக் கதை.

 

கதாபாத்திரங்கள்  

தாபாத்திரங்களில் கதையின் தொடக்கம் முதல் நம்முடன் பயணம் செய்யும் ஜீவா மனதில் நிற்கிறான்.

மற்ற கதாபாத்திரங்களும் இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறார்கள்.

கதை அலசல்

+க்கள்

அம்மா, அப்பா, அக்கா, தங்கை என யார் என்ன சொன்னாலும் தெளிவாக, திடமாக கயல்விழிக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜீவாவின் காதல் கதையின் பெரிய ப்ளஸ்.

  

மனம் நொந்து இருக்கும் கயல்விழியுடன் சேர்ந்து உட்கார்ந்து அழாமல், ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் சொல்லி அவளை அவளுடைய அம்மா கலக்டர் ஆக்குவது படிப்பவர்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்கும்.

மனம் தளராமல் முயற்சி செய்தால் எந்த நிலையில் இருந்தும் மீண்டு வரலாம் என்று சொல்லும் அந்த பகுதி கூல்.

-க்கள்

ஜீவாவின் காதல் ப்ளஸ் என்றால், ஜீவாவை சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து இருந்தும் கயல்விழி உடனே மனம் மாறுவது இடிக்கிறது.

வில்லன், வில்லியாக வருபவர்கள் சதி வேலையை செய்ய குறிப்பிட்ட நேரம் வரைக்கும் காத்திருந்திருக்க வேண்டிய அவசியமில்லையே என்று ஒரு கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை.

  

மொத்தத்தில், நல்ல ஒரு காதலை சொல்லும் குடும்ப நாவல். 

இது வரை படிக்காதவர்கள் கட்டாயம் படியுங்கள்.

 

டுத்து Chillzee KiMo வில் வெளியாகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பிரேமா சுப்பையாவின் 'வா... வா.. என் தேவதையே' நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

ண்கள் சொல்கின்ற கவிதை' போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள்.

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.