Chillzee KiMo Book Reviews - வா... வா.. என் தேவதையே - பிரேமா சுப்பையா
Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பிரேமா சுப்பையாவின் குறுநாவல் 'வா... வா.. என் தேவதையே'.
அந்த கதையின் சுருக்கத்தை தெரிந்துக் கொண்டு, கதையின் + & - களை அலசுவோம் வாங்க.
கதை சம்மரி:
கதையின் ஹீரோ சரண், ஹீரோயின் சுகன்யா.
தன்னிடம் அனுமதி கேட்காமல் கல்யாணம் செய்துக் கொண்ட மகன் சிவா, மருமகள் சுகன்யா மேல் கோபப்படாமல், ஓட்டவும் செய்யாமல் தனியாக இருக்கிறார் ராதா. எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிவா இறந்துப் போகிறான். சுகன்யா, பேத்தி அஞ்சலிக்கு துணையாக அவர்களுடன் தங்கி இருக்கிறார் ராதா.
சிவா இறந்து சில வருஷங்களுக்கு பிறகு சுகன்யாவிற்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க சரணை தேர்வு செய்கிறார் ராதா. சரணுடைய வாழ்க்கையிலும் வேறு மாதிரியான சோகம் இருக்கிறது. ராதாவின் கோரிக்கையை கேட்டு முதலில் தயங்குகிறான் சரண். அஞ்சலியை நேரில் பார்த்த பிறகு அவளுடைய அப்பாவாகவே யோசிக்க தொடங்கி விடும் சரண் ராதா முன் வைத்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்கிறான். முதலில் அதற்கு சம்மதிக்க மறுக்கும் சுகன்யாவும் பிறகு மனம் மாறி சம்மதிக்கிறாள்.
இவர்களுடைய கல்யாணம் வெற்றிப் பெற்றதா என்பது மீதிக் கதை.
கதாபாத்திரங்கள்
கதாபாத்திரங்களில் கதை முழுக்க அதிகம் அழுத்தம் கொடுக்கப் பட்டிருக்கும் ராதாம்மா மனதில் நிற்கிறார்.
முக்கிய கதாபாத்திரங்களான சரண், சுகன்யா கூட அவருக்குப் பின்னே இருக்கிறார்கள்.
கதை அலசல்
+க்கள்
நல்ல முற்போக்கான கருத்தை கருவாக கொண்ட கதை.
அஞ்சலி மீது சரணுக்கு தோன்றும் பாசம். இதை எக்ஸ்ட்ராடினரி என்றும் சொல்லலாம். எந்த விதத்திலும் நேரடி ரத்த சம்மந்தம் இல்லாமல் அந்த குழந்தையை தன் சொந்த மகளாக யோசிக்கும் சரணுடைய அன்பு ப்ளஸ்.
-க்கள்
எல்லா விதத்திலும் மன முதிர்ச்சி பெற்றவராக தோன்றும் ராதாம்மா, சுகன்யாவிற்கு சப்போர்ட்டாக இருக்கும் நேரத்தில் நேரடியாக அவளுடன் பேசாமல் இருப்பது இடிக்கிறது.
இயல்பாக போகும் கதையில் நளினி கதாபாத்திரமும் அதை சுற்றி நடக்கும் காட்சிகளும் சிறிது செயற்கைத் தன்மையுடன் இருப்பதாக தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில், குடும்ப நாவல் பிரியர்களுக்குப் பிடிக்கும் நல்ல ஒரு கதை.
இது வரை படிக்காதவர்கள் கட்டாயம் படியுங்கள்.
அடுத்து Chillzee KiMo வில் வெளியாகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பிந்து வினோத்தின் 'நீ தானா...!' நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
வா... வா.. என் தேவதையே போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள்.
- அபூர்வா
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.