(Reading time: 3 - 5 minutes)
தாய்க்கிணறு - அர்ச்சனா நித்தியானந்தம் [Thaaikkinaru - Archana Nithyanantham]
தாய்க்கிணறு - அர்ச்சனா நித்தியானந்தம் [Thaaikkinaru - Archana Nithyanantham]

Chillzee KiMo Book Reviews - தாய்க்கிணறு - அர்ச்சனா நித்தியானந்தம் [Thaaikkinaru - Archana Nithyanantham]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக அர்ச்சனா நித்தியானந்தம் பகிர்ந்து இருக்கும் நாவல் 'தாய்க்கிணறு - அர்ச்சனா நித்தியானந்தம் [ Thaaikkinaru - Archana Nithyanantham ]'.

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

புதிதாய் திருமணம் முடிந்த பாரி, அவனுடைய மனைவி ஜெயந்தியுடன் குறிஞ்சிமேட்டிற்கு வருகிறான். அந்த ஊரில் ஜமீனாக இருந்தவர் அவனுடைய தாத்தா. எதுவோ காரணத்திற்காக அந்த ஊரை விட்டு வந்து விட்டிருந்தார்கள் பாரியுடைய பாட்டியும், அப்பாவும்.

இப்போது பாட்டியும், அப்பாவும் இறந்துப் போய் விடவும், குறிஞ்சிமேட்டில் இருக்கும் தன் உறவினர்களை தெரிந்துக் கொள்ள மனைவியுடன் வந்திருக்கிறான் பாரி. அங்கே செங்கோடன் எனும் பெரியவர் அவனுக்கு துணையாக இருக்கிறார்.

குறிஞ்சிமேட்டில் தாய்க்கிணறு என்று அழைக்கப்படும் கிணற்றை ஊர் மக்கள் அனைவரும் தெய்வமாக வணங்குகிறார்கள். ஊரின் ஜமீன் குடும்பத்தில் சாபம் இருப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

குறிஞ்சிமேட்டில் தங்கி இருக்கும் போது ஜெயந்தி வித்தியாசமாக நடந்துக் கொள்ள தொடங்குகிறாள். அவளை சாந்தி என்று அழைத்து பேசுகிறார் செங்கோடன். ஏன், என்ன எதனால் என்று புரியாமல் குழம்பி நிற்கிறான் பாரி.

எதற்காக கிணற்றை தாய்க்கிணறு என்று ஊர் மக்கள் வணங்குகிறார்கள்?

ஜமீன் குடும்பத்தின் சாபம் என்ன? செங்கோடனுடன் பேசும் அந்த சாந்தி யார்?

இப்படி பல மர்ம முடிச்சுக்களை போட்டு பல ட்விஸ்ட் டர்ன்களுடன் ஒவ்வொன்றாக பிரிக்கிறார் அர்ச்சனா.

  

சீரியசான கதையில் ஆங்காங்கே ஜெயந்தி சொல்லும் டைமிங் நகைச்சுவையும். ஜெயந்தியை கலாய்க்கும் ஸ்மாலும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார்கள்.

   

மொத்தத்தில் குடும்ப ஆடியன்ஸை கவரும் ஜனரஞ்சகமான ஒரு மர்ம நாவல்.

    

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக ஸ்ரீஜா வெங்கடேஷ் பகிர்ந்திருக்கும் கடல் நிலவு - ஸ்ரீஜா வெங்கடேஷ் [ Kadal nilavu - Srija Venkatesh ] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

தாய்க்கிணறு - அர்ச்சனா நித்தியானந்தம் [ Thaaikkinaru - Archana Nithyanantham ] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.