(Reading time: 2 - 4 minutes)
சீதா அவதாரம் - சகி
சீதா அவதாரம் - சகி

Chillzee KiMo Book Reviews - சீதா அவதாரம் - சகி [Seetha Avataram - Saki]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சகி பகிர்ந்து இருக்கும் நாவல் 'சீதா அவதாரம் - சகி [Seetha Avataram - Saki]'.

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

சீதா, அமன் இருவருக்கும் கல்யாணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. சீதாவிடம் அன்பாக இருக்கும் அமன் அவள் கல்லூரி படிப்பு படித்து முடிப்பதற்காக அவளை விட்டு விலகியே இருக்கிறான். கதைப்போக்கில் சீதாவிற்கு மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை என்று தெரிய வருகிறது. அமனுடைய அம்மா ஆயிஷா பேகம் சீதாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மகனிடம் வற்புறுத்துகிறார். அதை ஏற்றுக் கொள்ளும் அமன் சீதாவுடன் பாஞ்சாலங்குறிச்சி போக முடிவு செய்கிறான்.

பாஞ்சாலங்குறிச்சியில் இருக்கும் அகிலாண்டேஷ்வரி சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்து போய் விட்ட பேத்தி லட்சுமியை நினைத்து இன்னும் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய மகன் ரகுவரனும், பேரன் ராஜசேகரனும் குடும்பத்தின் மொத்த சொத்தும் தங்களுக்கு என்று சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராஜசேகரனின் தங்கை பிருந்தா அவர்கள் இரண்டுப் பேரையும் வெறுக்கிறாள்.

சீதாவிற்கும் அந்த பாஞ்சாலங்குறிச்சிக்கும் என்ன தொடர்பு? சீதா மறந்து போன கடந்தக் காலத்தில் நடந்தது என்ன? என்ற கேள்விகளுக்கு கதை வழியாக பதில் சொல்லி இருக்கிறார் சகி.

 

காதல், ஆக்ஷன், கருத்து என்று எல்லாம் கலந்த ஜனரஞ்சகமான நாவல்.

 

குடும்ப நாவல் விரும்பும் ரீடர்ஸ் ரசித்து வாசிக்க கூடிய நாவல் இது.

    

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக ரவை பகிர்ந்திருக்கும் யார் அறிவார்! - ரவை [Yaar arivaar - RaVai] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

சீதா அவதாரம் - சகி [Seetha Avataram - Saki] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.