Chillzee KiMo Book Reviews - யார் அறிவார்! - ரவை [Yaar arivaar - RaVai]
Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக ரவை பகிர்ந்து இருக்கும் நாவல் 'யார் அறிவார்! - ரவை [Yaar arivaar - RaVai]' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
கோடீஸ்வரன் மீனா எனும் பணக்கார தம்பதிகள் சீமான் எனும் இளைஞனை தங்கள் வாரிசாக சுவீகரித்துக் கொள்கிறார்கள். கோடீஸ்வரனின் தங்கை மீரா காதலித்து வேறு ஜாதியை சேர்ந்த கண்ணனை திருமணம் செய்துக் கொண்டார். கண்ணனின் அக்காவின் மகன் சீமான்.
உடல் நலம் குறைந்திருக்கும் மகாலட்சுமிக்கு கிட்னி கொடுத்து உதவுகிறான் சீமான். அதனால் மகாவிற்கு சீமான் மேலே காதல் ஏற்படுகிறது. கண்ணன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதை தெரிந்துக் கொண்ட உடன் மகாலட்சுமியின் பெற்றோர் அவளுடைய விருப்பத்தை ஏற்க மறுக்கிறார்கள்.
இந்த நிலையில் மகாலட்சுமியின் தோழி நித்யா, நிருபமாவும் சீமானை விரும்புகிறார்கள். இவர்களில் யாரை சீமான் திருமணம் செய்துக் கொண்டான்? அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கு ரவையின் நாவல் பதில் சொல்கிறது.
சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை, பாரபட்சங்களை நாவல் சுட்டிக் காட்டுகிறது. சமூக நாவல் பிரியர்களுக்க்கான நாவல்.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக ரவை பகிர்ந்திருக்கும் காற்றின் கனல் - E.தமிழ் மதி [Katrin kanal - E.Tamil Mathi] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
யார் அறிவார்! - ரவை [Yaar arivaar - RaVai] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!
- அபூர்வா
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.