(Reading time: 2 - 4 minutes)
கடல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி
கடல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி

Chillzee KiMo Book Reviews - கடல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி [Kadal serum mazhaithuligal - A K. Sakthi]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக A K. சக்தி பகிர்ந்து இருக்கும் நாவல் 'கடல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி [Kadal serum mazhaithuligal - A K. Sakthi]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

தாநாயகி உமையாளின் அப்பா, தாத்தா இரண்டுப் பேரும் சின்ன வயதில் இறந்துப் போய் விட்டார்கள். இதனால் ஊரில் ஆண்கள் தங்காத வீடு என்று அவர்களின் குடும்பத்தை சொல்கிறார்கள். இதை எல்லாம் கேட்டு கேட்டு மனம் வெறுத்து போயிருக்கும் உமையாள் திருமணமே செய்துக் கொள்ள போவதில்லை என்று முடிவுக்கு வருகிறாள். அவளுக்கு எபப்டியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று யோசிக்கிறார் அவளுடைய அம்மா அருணா.

ஒரு நாள் சிநேகிதி பத்மஜாவை அருணா சந்திக்கிறார். பத்மஜாவிற்கு உமையாளை பிடித்து விடுகிறது. சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் மகன் கபிலனுக்கு உமையாளை திருமணம் செய்து வைக்க விரும்புகிறாள். உமையாள் மனசுக்குள் இருக்கும் கவலையைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் கபிலன் அவளையே காதலித்து திருமணம் செய்துக் கொள்வது என்று முடிவு செய்கிறான். அதே நேரம் உமையாள் வேலை செய்யும் கம்பெனியில் நடக்கும் நிழல் சம்பவங்கள் கபிலனின் கவனத்திற்கு வருகிறது.

கபிலன் உமையாளின் மனதை மாற்றினானா? உமையாள் கபிலனை ஏற்றுக் கொண்டாளா? கம்பெனியில் நடக்கும் விஷ்யங்கள் என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கு நாவல் வழியாக பதில் சொல்கிறார் A K சக்தி.

   

காதல், குடும்பம், ஆக்ஷன் என எல்லாம கலந்த ஜனரஞ்சக நாவல்.

    

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக முகில் தினகரன் பகிர்ந்திருக்கும் ஒருவர் மனதிலே ஒருவரடி - முகில் தினகரன் [Oruvar manathile oruvaradi - Mukil Dinakaran] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

டல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி [Kadal serum mazhaithuligal - A K. Sakthi] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.