Chillzee KiMo Book Reviews - ஒருவர் மனதிலே ஒருவரடி - முகில் தினகரன் [Oruvar manathile oruvaradi - Mukil Dinakaran]
Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக முகில் தினகரன் பகிர்ந்து இருக்கும் நாவல் 'ஒருவர் மனதிலே ஒருவரடி - முகில் தினகரன் [Oruvar manathile oruvaradi - Mukil Dinakaran]' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
கணவனை இழந்து தனியாக இருக்கும் அக்கா ஈஸ்வரிக்கு துணையாக ஊஞ்சலூருக்கு மாற்றல் வாங்கி வருகிறார் தலைமை ஆசரியர் விஸ்வேஸ்வரன். அங்கே இருக்கும் பள்ளியில் மாணவர்கள் சாப்பிட மட்டும் வருகிறார்கள். ஆசிரியர்கள் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். பள்ளியை ஒரு சவாலாக எடுத்து மாற்றிக் காட்ட முயற்சி செய்கிறார் விஸ்வேஸ்வரன். அந்த ஊர் சின்ன பண்ணை அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். ஆனால் அவருடைய மகள் ஸ்வேதா விஸ்வேஸ்வரனுக்கு உதவுகிறாள்.
ஸ்வேதா விஸ்வேஸ்வரன் நடுவே காதல் மலர்கிறது. ஆனால் அதனால் பிரச்சனைகள் வரும் என்று முடிவு செய்து இருவரும் காதலை மறைத்து வைக்கிறார்கள். ஸ்வேதாவிற்கு வேறு திருமணம் நிச்சயமாகிறது. ஈஸ்வரியும், விஸ்வேஸ்வரனும் அந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று விடுகிறார்கள்.
இருபதுக்கும் மேற்பட்ட வருடங்கள் உருண்டோட, விஸ்வேஸ்வரன் திருமணம் செய்துக் கொள்ளாமலே இருக்கிறார். அதற்கு காரணம் அவருக்கு ஸ்வேதா மீது இருக்கும் காதல் என்பதை ஈஸ்வரி புரித்துக் கொள்கிறார். எதிர்பாராதவிதமாக ஈஸ்வரி ஸ்வேதாவை சந்திக்க நேருகிறது. ஸ்வேதா மருத்துவ சமூக சேவையில் ஈடுப்பட்டிருக்கிறாள்.
ஸ்வேதா ஏன் தனியாக அங்கே இருக்கிறாள்? அவளுக்கு நிச்சயிக்கப் பட்ட கல்யாணம் என்ன ஆனது? விஸ்வேஸ்வரன் ஸ்வேதா காதல் என்ன ஆனது என்பது போன்ற கேள்விகளுக்கு நாவல் பதில் சொல்கிறது.
காதல் கலந்த சமூக நல நாவல்.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக எஸ். பர்வின் பானு பகிர்ந்திருக்கும் அன்றில்… - எஸ். பர்வின் பானு [Andril... - S Parveen Banu] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
ஒருவர் மனதிலே ஒருவரடி - முகில் தினகரன் [Oruvar manathile oruvaradi - Mukil Dinakaran] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!
- அபூர்வா
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.