(Reading time: 2 - 4 minutes)
அன்றில்… - எஸ். பர்வின் பானு
அன்றில்… - எஸ். பர்வின் பானு

Chillzee KiMo Book Reviews - அன்றில்… - எஸ். பர்வின் பானு [Andril... - S Parveen Banu]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக எஸ். பர்வின் பானு பகிர்ந்து இருக்கும் நாவல் 'அன்றில்… - எஸ். பர்வின் பானு [Andril... - S Parveen Banu] ' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

ள மருத்துவன் வசீகரன். அவனுக்கும் அவன் மாமா மகள் சுவாதிக்கும் நடுவே காதல் இருக்கிறது. இரண்டு குடும்பத்திற்கும் இந்த காதல் தெரியும் அதை ஏற்றுக் கொள்ளவும் செய்திருக்கிறார்கள். திடீரென்று சுவாதியின் அப்பா மகாதேவன் சுவாதியை வசீகரனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க மறுக்கிறார். காரணமாக ஜாதகம் என்று பொய் சொல்கிறார். அவரே வசீகரனுக்காக பெண் பார்த்து கிராமத்தை சேர்ந்த அதிகம் படிக்காத பணக்கார பெண் மஹதியை தேர்வு செய்கிறார்.

வசீகரனுக்கு பிடிக்காமல் அந்த திருமணம் நடந்து விடுகிறது. வசீகரன் வேறு ஒருத்தியை காதலிப்பது தெரிந்தே கல்யாணம் செய்துக் கொள்ளும் மஹதி தன்னுடைய வெகுளித்தனமான அன்பினால் குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் கவர்கிறாள். சீக்கிரமே வசீகரனின் மனமும் மாறிப் போய் விடுகிறது. அவர்களுக்குள் எல்லாம் சரியாகி மஹதி கர்ப்பமாகி இருப்பது தெரியும் போது அவளுக்கு ப்ரெயின் ட்யூமர் இருப்பது தெரிய வருகிறது.

குழந்தையுடன் இருப்பவளுக்கு எப்படி ட்ரீட்மென்ட் கொடுப்பது என்று புரியாமல் தவிக்கிறான் வசீகரன்.

மஹதியை வசீகரன் காப்பாற்றினானா? சுவாதியுடனான அவன் காதல் என்ன ஆனது? மகாதேவன் ஏன் திடீரென வசீகரனுக்கு சுவாதியை திருமணம் தர மாட்டேன் என்று சொன்னார்? என்ற கேள்விகளுக்கு நாவல் வழியாக பதில் சொல்கிறார் பர்வீன்.

 

காதல், குடும்பம், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சக நாவல்.

 

குடும்ப வகை நாவல்கள் விரும்பிப் படிக்கும் ரீடர்ஸ்க்கு பிடிக்கும் நாவல்.

    

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக V Suresh பகிர்ந்திருக்கும் I Myself - V Suresh நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

ன்றில்… - எஸ். பர்வின் பானு [Andril... - S Parveen Banu] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.