Chillzee KiMo Book Reviews - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - சாகம்பரி [Pinai vendum panmaaya kalvan - Sagampari]
Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சாகம்பரி பகிர்ந்து இருக்கும் நாவல் 'பிணை வேண்டும் பன்மாய கள்வன் - சாகம்பரி [Pinai vendum panmaaya kalvan - Sagampari]' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
ப்ரமோதா சிறு வயதிலேயே அப்பா அம்மாவை இழந்தவள். இப்போது தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருபவள். ப்ரமோதாவிற்கு பத்து வயது இருக்கும் போது சந்தித்த ஒருவன் அவள் மனதில் ஹீரோவாக பதிந்துப் போகிறான்.
ஹிதேஷ் புகழ் பெற்ற நடிகன். சில வருடங்களுக்கு முன் சொந்தங்களின் சுயநலத்தால் தற்கொலை செய்துக் கொள்ள நினைத்த ஹிதேஷின் மனதை ப்ரமோதா வேறு ஒருவரிடம் பேசும் பேச்சு மாற்றுகிறது. வாழ்வில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று உத்வேகத்துடன் முயற்சி செய்து வெற்றியும் பெறுகிறான். இதற்கு காரணம் ப்ரமோதா தான் என்று அவள் மேல் மனதுக்குள் காதலை வளர்க்கிறான்.
ஒரு சினிமா ஷூட்டிங்கிற்கு வரும் போது ப்ரமோதாவை சந்திக்கிறான் ஹிதேஷ். அவள் தான் அவனுடைய மனதில் இருப்பவள் என்பது அவனுக்கு உடனே புரிந்துப் போகிறது. ஆனால் ப்ரமோதா மனசுக்குள் வேறு ஒருவன் இருப்பதை தெரிந்துக் கொண்டு அதிர்ச்சி ஆகிறான்.
ப்ரமோதாவின் மனதை ஜெயிக்க முயற்சி செய்கிறான். இருந்தாலும் அவளுடைய பழைய ஹீரோ வந்து விட்டால் ப்ரமோதாவின் வாழ்க்கையில் அவன் நிலை என்ன என்று நினைத்து குழம்புகிறான்.
ஹிதேஷின் காதல் வெற்றி பெற்றதா? ப்ரமோதா மனதில் இருக்கும் ஹீரோ யார்? அவன் மீண்டும் வந்தானா? என்ற கேள்விகளுக்கு தன் நாவலின் ஊடே பதில் சொல்லி இருக்கிறார் சாகம்பரி.
காதல், குடும்பம், மெல்லிய சஸ்பென்ஸ் என செல்லும் ஜனரஞ்சகமான நாவல்.
குடும்ப நாவல் பிரியர்களுக்கு ஏற்ற நாவல்.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக செசிலி வியாகப்பன் பகிர்ந்திருக்கும் தொலைவில் நீ நினைவில் நான் - செசிலி வியாகப்பன் [Tholaivil Ni Ninaivil Naan - Sesily Viyagappan] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
பிணை வேண்டும் பன்மாய கள்வன் - சாகம்பரி [Pinai vendum panmaaya kalvan - Sagampari] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!
- அபூர்வா
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.