Chillzee KiMo Book Reviews - உன் நேசம் என் சுவாசம் - ராசு [Un nesam en suvasam - RaSu]
Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக ராசு பகிர்ந்து இருக்கும் நாவல் 'உன் நேசம் என் சுவாசம் - ராசு [Un nesam en suvasam - RaSu]' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
சந்திரமோகன் வேதவள்ளி தம்பதிகளுக்கு மூன்று மகன்கள். சந்திரமோகனுக்கு மகள் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. அவருடைய அம்மா இறந்த நேரம் மனைவியிடம் ஆறுதல் கிடைக்க வழியில்லாமல் போய் விடுகிறது. மனதில் வருத்தமும் தவிப்புமாக இருப்பவருக்கு அறிமுகம் ஆகிறாள் குழந்தை கிருஷ்ணவேணி. அவள் மீது அளவு கடந்த பாசம் வைக்கிறார் சந்திரமோகன். கிருஷ்ணவேணியும் அதே போல சந்திரமோகன் மேலே அன்பை வைத்திருக்கிறாள்.
வேதவள்ளியின் அக்கா அமுதவள்ளி தன் பேத்தி பத்மினியை சந்திரமோகன் வீட்டு மருமகள் ஆக்க முயற்சி செய்கிறாள். சந்திரமோகனுக்கு கிருஷ்ணவேணி தன் கடைசி மருமகள் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சந்திரமோகனின் மூன்றாவது மகன் தமிழ்வேந்தனிடமும், வேதவள்ளியிடமும் பத்மினியும், அமுதவள்ளியும் கிருஷ்ணவேணி பற்றி தவறான கருத்தை விதைக்கிறார்கள்.
தமிழ்வேந்தனும், வேதவள்ளியும் கிருஷ்ணவேணி பற்றிய உண்மையை அறிந்துக் கொண்டார்களா? சந்திரமோகனின் ஆசை நிறைவேறியதா? போன்ற கேள்விக்கு நாவலின் ஊடே பதில் சொல்லி இருக்கிறார் ராசு.
குடும்பம், செண்டிமெண்ட் கலந்த நாவல்.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக விஜயகுமாரன் பகிர்ந்திருக்கும் நின் திருவடி சரணம் - விஜயகுமாரன் [Nin thiruvadi saranam - Vijayakumaran] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
உன் நேசம் என் சுவாசம் - ராசு [Un nesam en suvasam - RaSu] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!
- அபூர்வா
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.