(Reading time: 2 - 4 minutes)
நின் திருவடி சரணம் - விஜயகுமாரன்
நின் திருவடி சரணம் - விஜயகுமாரன்

Chillzee KiMo Book Reviews - நின் திருவடி சரணம் - விஜயகுமாரன் [Nin thiruvadi saranam - Vijayakumaran]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக விஜயகுமாரன் பகிர்ந்து இருக்கும் நாவல் 'நின் திருவடி சரணம் - விஜயகுமாரன் [Nin thiruvadi saranam - Vijayakumaran]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

திருச்சுழி என்ற ஊரில் காதல் காரணமாக நடந்த சில சம்பவங்கள் அந்த ஊரையே இரண்டாக்கி கோவில் தேரோட்டம் நடக்காமல் பிரச்சனையாக்கி இருக்கிறது. அந்த காதலில் அங்கம் வகித்த கல்யாணி, அவளின் அம்மாவுடன் இப்போதும் அதே ஊரில் வசிக்கிறாள்.

மூர்த்தி உடற்பயிற்சி ஆசிரியர். மூர்த்தி வேலை செய்யும் பள்ளியில் இருந்து என்எஸ்எஸ் தொடர்பான சேவை செய்ய மூர்த்தி தலைமையில் மாணவ மாணவிகள் திருச்சுழி வருகிறார்கள். அவர்களுக்கு கல்யாணி உதவுகிறாள். மூர்த்தி கல்யாணி இடையே ஈடுப்பாடு ஏற்படுகிறது.

மூர்த்தி தலைமையில் துப்புரவு பணிகளில் மாணவர்கள் தொடங்க, அவர்களையும் அறியாமல் அந்த ஊர் பிரச்சனையில் சிக்கி கொள்கிறார்கள்.

மூர்த்தியால் ஊர் பிரச்சனையை சுமுகமாக தீர்க்க முடிந்ததா? இரண்டுப் பட்ட ஊர் மீண்டும் ஒன்றானதா? கல்யாணி மூர்த்தி காதல் என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு விஜயக்குமாரன் நாவலில் பதில் அளித்துள்ளார்.

 

குடும்பம், சமூகம் என இரண்டும் கலந்த நாவல்.

   

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக பாரதி பிரியன் பகிர்ந்திருக்கும் யாழினி - பாரதி பிரியன் [Yaazhini - Bharathi Priyan] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

நின் திருவடி சரணம் - விஜயகுமாரன் [Nin thiruvadi saranam - Vijayakumaran] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.