(Reading time: 2 - 4 minutes)
யாழினி - பாரதி பிரியன்
யாழினி - பாரதி பிரியன்

Chillzee KiMo Book Reviews - யாழினி - பாரதி பிரியன் [Yaazhini - Bharathi Priyan]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக பாரதி பிரியன் பகிர்ந்து இருக்கும் நாவல் 'யாழினி - பாரதி பிரியன் [Yaazhini - Bharathi Priyan]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

ல்லவ மன்னரிடம் தோல்வி உற்று ஓடிப் போகும் களப்பிரர்கள் சேர நாட்டு தளபதி விஜயனின் சூழ்ச்சியை ஏற்றுக் கொண்டு அமைதியான சேர நாட்டை தாகி கைப்பற்றுகிறார்கள். இதில் சேர அரசன், அரசி அவரின் முதல் இரண்டு மகள்கள் இறந்து விடுகிறார்கள். கடைசி புதல்வியான யாழினி மட்டும் தப்பித்து விடுகிறாள். சேர நாட்டிற்கு நேர்ந்த ஆபத்திற்கு காரணம் பல்லவ நாட்டு அரசனின் தேச விஸ்தரீப்பு நடவடிக்கைகள் என்று முடிவு செய்து அதற்கு பழி வாங்க முடிவு செய்கிறாள். அவளுக்கு அவளுடைய தோழ, தோழிகள் பார்த்திபன், பூவிழி, சுந்தரன், கடம்பன், சிம்மவேணி உதவுகிறார்கள்.

பல்லவப் பேரரசின் மாபெரும் படைத்தலைவன் கந்தமாறனை கொலை செய்ய யாழினி முயற்சி செய்யும் அதில் இருந்து தப்பித்துக் கொள்கிறான் கந்தமாறன். அப்படியே, பல்லவர்கள் சேரர்களை பகைவர்களாக கருதவில்லை என்பதை அவளுக்கு புரிய வைக்கிறான்.

களப்பிரர்கள் போலவே சாளுக்கிய அரசன் புலிகேசி, பாண்டிய அரசன் மாறவர்மன் என அனைவரும் சேர நாட்டை கைப்பற்ற விரும்புவதை யாழினி புரிந்துக் கொள்கிறாள்.

இந்த ஆபத்தில் இருந்து சேர நாடு தப்பித்ததா?  யாழினி இழந்த அரசை மீது எடுத்தாளா? விஜயன், களப்பிரர்கள், புலிகேசி, மாறவர்மன் ஆகியவர்களின் சூழ்ச்சிகள் என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கு "யாழினி" பதில் சொல்கிறது.

 

ரலாற்று நாவல் பிரியர்களுக்கு பிடிக்கும் நாவல்.

   

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் எனையாளும் காதல் தேசம் நீதான் - சசிரேகா [Enaiyaalum kadhal desam nee thaan - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

யாழினி - பாரதி பிரியன் [Yaazhini - Bharathi Priyan] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.