ஒரு பையனும் பொண்ணும் பெஸ்ட் பிரென்ட்ஸ் ஆக இருந்தார்கள்.
அந்த பெண்ணிற்கு தான் குண்டாக இருக்கிறோம் என்ற கவலை அதிகமாகி கொண்டே போனது. எப்படியாவது ஸ்லிம் ஆகி விடுவது என்று முடிவு செய்தாள்.
அன்று இருவரும் சந்தித்தப் போது, அவன் “ஹாய் என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
அவள், “நான் ஸ்லிம் ஆக ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துட்டு இருக்கேன்.” என்றாள்.
“இது தானா? ரொம்ப ஈசியான ஒரு எக்ஸர்சைஸ் இருக்கு. அதை மட்டும் செஞ்சா நீ எட்டே நாள்ல ஸ்லிம் ஆயிடலாம்.”
அவளுக்கு வியப்பு தாங்கவில்லை!
“அப்படி ஒரு எக்ஸர்சைஸ் இருக்கா? என்னன்னு சொல்லு.”
“நான் சொல்ற இந்த ஸ்லிம் ஆகுற எக்ஸர்சைஸ நல்லா கவனி.
உன் தலையை இடது பக்கம் திருப்பு.
இப்போ, உன் தலையை வலது பக்கம் திருப்பு.
சரியா செய்ற, வெரி குட்.
உனக்கு சாப்பாடு யார் கொடுத்தாலும், அதை வாங்காம இந்த எக்ஸர்சைஸ மட்டும் திரும்ப திரும்ப செய்! நீ சீக்கிரம் ஸ்லிம் ஆயிடலாம்!
😁 😁 😁 😁
😀😀😀😀😀
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.