(Reading time: 5 - 10 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 04 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாயம் 4 - பவானி மந்திரம்!

  

மாடு படுத்துக் கொண்ட இடம் சாலையில் ஒரு மதகடியில். பின்னால் ஒரு பாரின் கார் வந்து நின்றது. அதை நம் கதாநாயகன்

  

கல்யாண சுந்தரம் பி.ஏ.பி.எல். ஓட்டிக் கொண்டு வந்தான். மாட்டு வண்டிக்குப் பின்னால் வந்து கார் நின்றது. மேலே முன்னேற முடியாததால் கோபத்துடன் 'ஹாரனை' அழுத்தினான் கல்யாண சுந்தரம். வண்டி நகருகிற வழியாக இல்லை.

  

"கொஞ்சம் கூட 'ரோட் சென்ஸே' கிடாயாது. எல்லாம் 'நான் சென்ஸ்' தான்" என்று உரக்கக் கூறியபடியே இறங்கி வண்டியை நோக்கி நடந்து வந்தான்.

  

"தமிழிலே திட்டுங்க சாமி" என்றான் வண்டிக்காரன்.

  

அவன் நிலைமையை உணர்ந்து பரிதாபப்பட்ட கல்யாணம், "ஏம்பா, மாடு படுத்துக்க இங்கேதான் இடம் பார்த்துதா?" என்றான்.

  

"அது மதகைக் கண்டுதா? பிளஷரைக் கண்டுதா? கொஞ்சம் மாட்டைத் தூக்கி விடுங்க சாமி" என்றான் வண்டிக்காரன்.

  

"தூக்கி விட்டுடுவேன். ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஸில்க் சட்டை அழுக்காகி விடுமோன்னுதான் பாக்கிறேன். இன்றைக்குத்தான் சலவை பண்ணி வந்தது."

  

"அது சரி" என்று அலுத்துக் கொண்டே வண்டிக்காரன் மாட்டை அவிழ்க்க ஆரம்பித்தான்.

  

இதற்குள் மாசிலாமணி கல்யாணத்தை நெருங்கி, "ஏன் ஸார்? ஹோம்ரூல் கல்யாணசுந்தரத்தின் மகன் கோபாலகிருஷ்ணன் வீடு இந்த ஊரில் எங்கே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.