(Reading time: 9 - 17 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

  

சினிமா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ஒரு வரிசையில் கடைசியில் ஒரு சீட் காலியாக இருந்தது. பின் புற வரிசையில் இரண்டு 'சீட்'கள் இருந்தன. முதலில் பட்டப்பாவும், நர்ம தாவும் பின்புற வரிசையில் உட்கார்ந்தார்கள். கடைசி சீட்' காலியாக இருந்ததில் பாலு உட்காரச் சென்றான். அந்த வரிசையில் பெண்களே இருந்ததால் இவன் வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நர்மதா அந்த இடத்துக்கு வந்து உட்கார்ந்தாள். தனியாக உட்கார்ந்திருக்க நர்மதாவுக்கு என்னவோ போல் இருந்தது.

  

விளக்குகள் அணைந்தன. படம் ஓட ஆரம்பித்தது. வழக் கமான 'டூயட்'. ஓடிப்பிடித்தல், அனைத்தல். பின்புறமிருந்து ஒரு கை இருட்டில் அவள் தோளைத்தொட்டது. நர்மதா புல்லரித்துப் போனாள். கணவன்தான் என்று நினைத்தாள். அந்தக் அவள் கழுத்தில் சுருண்டிருந்த முடியை வருடிக் கொடுத்தது.

  

பிறகு சிறிதுநேரம் ஒன்றுமில்லை. திரும்பவும் தன்னை அந்தக் கரம் தொடவேண்டும் என்று ஏங்கினாள் அவள்.

  

இடைவேளையின் போது 'சீட்டில் பட்டப்பா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். இவளைக் குறும்புடன் திரும்பிப் பார்த்த பாலு "கூல் ட்ரிங்ஸ்' சாப்பிடறியா?" என்று கேட்டான்.

  

நர்மதா குழப்பத்துடன் தவித்தாள். கணவன் தூங்குகிறான். “உம்” என்று தலையை ஆட்டி வைத்தாள். இதற்குள் பட்டப்பா விழித்துக் கொண்டுவிட்டான்.

  

"ரொம்ப நாழியா தூக்கமோ?"

  

என்னவோ அப்படி அசந்து போச்சு...எனக்கு இதெல்லாம் பிடிச்சிறதேயில்லை. அக்கா தொத்தரவு பிடிக்காம வந்தேன்' என்றான் மனைவியிடம்.

  

'இருட்டில் தன்னைப்பரிவுடன் தொட்ட அந்தக்கை பாலு வினுடையதா? என்ன தைரியம் இருந்தால் இப்படித்தொட முடியும்? தொட்டா என்ன? எத்தனை நாளைக்கு இப்படி கரு கிண்டு இருக்கிறது? அந்த சாயிராமே தேவலை. அவர் பேச்சைக் கேட்டுண்டு சினிமாவிலே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.