(Reading time: 9 - 17 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

சேர்ந்திருந்தா எத்தனை பெரிய நடிகரெல்லாம் என்னைத் தொட்டிருப்பா.."

  

மறுபடியும் இருட்டு. இப்போ முதல் இரவு, வழக்கம் போல் பால் பழம். கஷ்டம் கஷ்டம். இதெல்லாம் காண்பிக் விட்டால் என்ன தலையா வெடித்து விடும்? பல வீடுகளில் இதெல்லாம் இப்போது கிடையாது. மனைவியை அழைத்துக் கொண்டு எங்கேயாவது கிளம்பி விடுகிறான். நர்மதா சலித்துக்கொண்டாள். பக்கத்தில் இருந்த பெண்களும் இதை விரும்பவில்லை. 'நம்பப் பெண்ணு கூட உட்காந்து சினிமா பாக்கமுடியலை இப்போ. மானம் போவுது...' என்று ரகசியக் குரலில் ஆங்காரமாகப் பேசினாள் அந்த மூதாட்டி.

  

முதல் இரவில் ஆரம்பித்த காட்சிகள் படிப்படியாக மனைவியைக் கொடுமைப் படுத்துவது வரையில் நீண்டன.

  

"என்ன கதைன்னு சினிமா எடுக்கிறான்கள்? ஒண்ணு காதலும் ஊடலும். இல்லைன்னா பொம்மனாட்டி பிழியப் பிரிய அழுதுண்டு நிக்கணும். அதைப் பார்த்துட்டு நாம்பளும் அழணும். ஆதியிலே சீதை, திரௌபதி அழுதது போறலை ன்னு நாமும் அழணும்னே கதை எழுதி படம் டுக்கிறாங்க...'' மூதாட்டியே பேசினாள்.

  

பாலுவுக்குப் படத்தைவிட நர்மதாவே சுவாரஸ்யமாக இருந்தாள்.

  

அவள் தலையிலிருந்து கட்டு மல்லிகை கும்மென்று மணத்தது.

  

"பட்டப்பா! உம் பெண்டாட்டி ரொம்ப அழகுடா என்றான், அவனை ரகசியமாகக் கிள்ளியபடி.

  

"அப்படியா?''

  

"அப்ப உனக்கு ஒண்ணும் தெரியலையா? ஆறு மாசத்துக்கு மேலா அவளோட குடித்தனம் நடத்தறே. இந்த மாதிரி அழகு தெய்வத்தைக் கீழே நடக்கவே விடக் கூடாதுடா. கையிலே வச்சுண்டு தாங்கணும்...”

  

"அவ கிட்டே நான் ஆசையாதான் இருக்கேன்''

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.